Thursday, July 9, 2009

பிட்டு - 28

1. அன்பே, வாங்க ஒடிப் போயிடலாம் கூழோ கஞ்சியோ நீங்க ஊத்தறதை நான் சாப்பிட்டுக்கறேன் .. ..

சந்தடிச்சாக்குல சமையல் வேலையை என் தலைலகட்டறே பாத்தியா.
==========
2. ஏன் தோசை நடுவுல ஒட்டை இருக்கு ?

இதுதான் புதுசா வந்திருக்கிற சி.டி தோசைங்க
==========
3. நடிகை 1: யாராவது எனக்கு பழம் கொடுத்தால் நான் வாங்க மாட்டேன்.

நடிகை 2: ஏன் .. ?

நடிகை 1: அப்புறம், "பழம் பெறும் நடிகை"னு சொல்லிடுவாங்க
==========
4. ஒரு மாவட்ட கலெக்டருக்கு வேறு ஊருக்குப் போகச் சொல்லி டிரான்ஸ்ஃபேர் ஆர்டர் வந்தது. கலெக்டரின் ஊழியர்கள் அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தினார்கள்.

விழா முடிந்த பிறகு ஒருவர் மட்டும் ஒரமாக உட்கார்த்து அழுது கொண்டிருந்தார். அவர் அருகில் சென்ற கலெக்டர் அவரைப் பார்த்துக் கண்கலங்கி "கவலைப்படாதே, நீ

என்மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பாய் என்று தெரியாது, அடுத்து வரப்போகும் கலெக்டர் என்னைவிட நல்லவராக இருப்பார்" என்று ஆறுதல் சொன்னார்.

அதற்கு அழுதுகொண்டிருந்த அந்த நபர் "சும்மா எனக்காகப் பொய் சொல்லாதீங்க சார், இதை நான் நம்பமாட்டேன், ஏன்னா உங்களுக்கு முன்னாடி இருந்த கலெக்டரும்

இதையேதான் சொன்னாரு" என்றார்.
==========
5. வைட்டமின் A, B, D, K எல்லாமே எதில் கிடைக்கும் .. .. ?

பழங்கள்

இல்லை

காய்கறிகள்

இல்லை

நீங்களே சொல்லிடுங்க

ஹி.... ஹி.... மெடிக்கல் ஷாப்பில்
==========
6. நம்ம தலைவருக்கு மறதி அதிகம்னு எப்படி சொல்றீங்க ?

நான் அவரு கட்சி எம்.பிங்கறதையே மறந்திட்டு நீங்க நம்ம கட்சிக்கு வந்தீங்கன்னா 25 லட்சம் தர்றோம்னு எங்கிட்டேயே வியாபாரம் பேசுறாருப்பா
==========
7. சார் நம்ம ஆபீசுல யார் யாரு லஞ்சம் வாங்குறாங்கன்னு எனக்குத் தெரியும் சார்

அப்படியா உடனே சொல்லு, முதல்ல அவங்களை வேலையை விட்டுத் தூக்கறேன்

ஆமா சார், யாருன்னு சொன்னா எனக்கு எவ்வளவு தருவீங்க சார்?
==========

இன்றைய மெகா ஜோக்:

8. ஒரு புலனாய்வு நிறுவனம் இன்டர்வியூவுக்கு மூன்று பேரை அழைத்திருந்தது.

முதலாவது நபர் அலுவலகத்துக்குள் போனதும் அவரிடம் ஒரு துப்பாக்கி கொடுக்கப்பட்டது. இதோ பாருங்க எங்களோட ஊழியராக இருக்கணும்னா நீங்க எங்களுக்கு

விசுவாசமா, நாங்க சொல்ற எதையும் கேட்கற ஆளா இருக்கணும் உங்க மனைவி பக்கத்து ரூம்ல இருக்காங்க போய் அவங்களை இந்தத் துப்பாக்கியால சுட்டுக் கொன்னுட்டு

வாங்க * என்றார்கள் இன்டர்வியூ கமிட்டியில் இருந்தவர்கள்.

இவர் துப்பாக்கியை எடுத்தார் ஆனால் அடுத்த நிமிஷமே ஸாரி என்னால என் மனைவியைக் கொல்ல முடியாது * என்று துப்பாக்கியைத் தந்துவிட்டுக் கிளம்பி விட்டார்.

இரண்டாவது நபர் வந்தார் அவரிடமும் அதே கட்டளை துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு தனது மனைவி இருந்த அறை வரைக்கும் போனவர் மனசு தாங்காமல் எனக்கு என்

பெண்டாட்டிதான் வேணும் ஆளை விடுங்க என்று ஜகா வாங்கிவிட்டார்.

மூன்றாவது நபரிடம் இதே விஷயம் சொல்லப்பட துப்பாக்கியோடு அவரது மனைவி இருந்த அறைக்குள் நுழைந்து விட்டார். சிறிது நேரத்தில் அறையிலிருந்து அந்தப்

பெண்ணின் அலறல் கிளம்பியது. இன்டர்வியூ கமிட்டிக்காரர்கள் ஒடிப்போய் பார்த்தபோது அங்கே தன் மனைவியைத் துப்பாக்கிக் கட்டையால் அடித்துக் கொண்டிருந்தார் அந்த

நபர் "ஏம்பா இப்படி அடிக்கிறே ?" என்று கேட்டபோது, துப்பாக்கியில குண்டு நிரப்பாம கொடுத்து இருக்கீங்களே சார், சனியனை அடிச்சே கொல்ல வேண்டியிருக்கு" என்றார்

அவர்.

பிட்டு - 27

1. மகன்: அப்பா .. .. எங்க ஸ்கூலில் "தந்தையின் உழைப்பு" என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடக்கப் போகிறது என்ன எழுதவது?

அப்பா: நான் ஆபீஸில் உழைப்பதைப் பற்றி மட்டும் எழுது, வீட்டில் மாவாட்டுவதை எல்லாம் எழுதித் தொலைக்காதே.
==========
2. அரசியல் பொதுக்கூட்டத்தில் ஒரு அறிவிப்பு:

முப்பது உண்டியல்களைக் கூட்டத்தினரிடையே வசூலுக்கு அனுப்பினோம். இருபத்தெட்டுதான் திரும்பி வந்துள்ளன உண்டியலுடன் எதிர் அணிக்கு ஒடிவிட்ட அந்த

இருவரையும் அப்படியே தங்கள் கட்சியிலேயே வைத்துக் கொண்டு உண்டியல்களை மட்டும் திருப்பி அனுப்புமாறு எதிர் அணியினரைப் பணிவோடு வேண்டுகிறோம்
==========
3. அந்த லேடி டாக்டர் தொட்டாலே போதும், அம்பது ரூபாய் வாங்கிடுவாங்க.

அப்படி ஒண்ணும் அழகா இல்லையே அவங்க.
==========
4. சர்வர் : முதலாளி... இந்த ஆள் காசில்லாமல் சாப்பிட்டார்...

முதலாளி : சரி... மாவாட்டச் சொல்லிடு...

சர்வர் : சென்னேன்... மெடிக்கல் சர்டிபிகேட்டைக் காட்டறார். நெஞ்சுவலி வருமாம்...
==========
5. மனைவி : நாளைக்கு எங்க `லேடீஸ் கிளப்'பில் எல்லாரையும் அவங்க அவங்க ஹஸ்பெண்டுகளை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்காங்க.

கணவன் : எதுக்காக?

மனைவி : புதுசா ஒரு சலவைத் தூளை அறிமுகப்படுத்தறார்களாம்.
==========
6. அந்தக் கடையில் தள்ளுபடி விலையில் வாங்கிட்டுப் போன துணி சாயம் போகுதுன்னு கன்ஸ்யூமர் கோர்ட்டிலே கேஸ் போட்டியே என்ன ஆனது?

கேஸ் தள்ளுபடி ஆயிடுச்சு!
==========
7. புதுக்கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்கமாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

புதுக்கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!
==========

இன்றைய மெகா ஜோக்:

8. மீட்டிங்லே பேச வந்த தலைவர் ஏன் டென்ஷனா உட்காந்திருக்கார்?

போஸ்டர்ல அஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்றதுக்குப் பதிலா, கஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்ணிட்டாங்களாம்.

பிட்டு - 26

1. பக்கத்து வீட்டுக்காரி காபி சாப்பிடணும்னா அதுக்காக எதைத்தான் இரவல் கேட்கறதுன்னு இல்லியா ?

காபி பொடியா, சர்க்கரையா எதை இரவல் கேட்டாங்க ?

ரெண்டும் இல்ல காபி போட்டுத்தர அஞ்சு நிமிஷம் என் கணவரை இரவலா அனுப்பணுமாம்
==========
2. எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு?

இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு?
==========
3. சே... அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு!

பேசட்டுமே சார்... நம்ம கட்சிப் பிரமுகர்தானே.

நீங்க வேற ... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்!
==========
4. அந்த ஆஸ்பத்திரியில ஆறாம் நம்பர் ரூமும் நூறாம் நம்பர் ரூமும் ஆபரேஷன் தியேட்டர்.

அப்போ ஆறுலேயும் சாவு.. நூறுலேயும் சாவுன்னு சொல்லுங்க.
==========
5. நான் வெச்சிருந்த விஸ்கி பாட்டிலைத் தூக்கி என் மனைவி கிணத்துல போட்டுட்டா...

அதான் குடி முழுகிப் போனா மாதிரி இருக்கீங்களா.
==========
6. ஏன் இந்தப் படத்துல கதாநாயகன் முட்டையின் மஞ்கள் கரு-வை சாப்பிடுற மாதிரி அடிக்கடி காட்றாங்க

கதையில கருவே இல்லேன்னு யாரும் சொல்லிவிடக் கூடாது பாருங்க அதான்.
==========
7. நேத்து ராத்திரி என் மனைவியை நான் கைநீட்டி அடிச்சுட்டேன்.

ஐயோ அப்புறம் என்னாச்சி?

அதுக்குள்ள என் மனைவி என்னை எட்டி உதைச்சி, "வேலைக்குப் போக நேரமாச்சு, எழுந்திரி" ன்னு கனவைக் கலைச்சுட்டா.
==========

இன்றைய மெகா ஜோக்:

8. நேத்து முதல் ராத்திரியில நடக்கக்கூடாதது நடந்திடுச்சு.

என்னாச்சு தூங்கிட்டியா?

இல்லடா! எல்லாம் முடிந்தவுடன் பழக்க தோஷத்துல அவள் கையில ஐநூறு ரூபா நோட்டை திணிச்சிட்டு எழுந்து வந்துட்டேன்.

அப்புறம்?

அவ மீதின்னு சொல்லி 200 ரூபாய் என் கையில் திருப்பிக் கொடுத்துட்டா!

பிட்டு - 25

1. எதுக்கு தூங்கிக்கிட்டிருக்கிற உன் கணவரை அலாரத்தை எடுத்து அடிச்சே ?

அலாரம் அடிச்சாத்தான் அவர் எழுந்திரிப்பாரு.
==========
2. முகம் தொங்கிப்போய் வந்த அவனைக் கனிவோடு விசாரித்தான் நண்பன், "ரொம்ப கவலையா இருக்கே போலிருக்கு என்னாச்சு ?"

"நான் அப்பாவாகப் போறேன்" என்ற அவனது பதிலில் சோகம் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

"வாவ்! சந்தோஷமான சமாசாரமாச்சே, இதுக்குப் போய் ஏண்டா கவலைப்படறே!".

"என்ன சந்தோசமான சமாசாரம் ? இந்த விஷயம் இன்னும் என் பெண்டாட்டிக்குத் தெரியாது".
==========
3. டாக்டர் நான் நூறு வயசு வரைக்கும் இருப்பேன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு.

அப்ப சரி நானா ஜோசியரான்னு ஒரு கை பார்த்துடுவோம்.
==========
4. அந்த ஆசிரமத்துல இருக்கிற நாய் ஏன் பயங்கரமா குரைக்குது ?

அதுவா யாரோ நிஜ சாமியார் உள்ளே நுழைஞ்சிருக்காராம் அதான்
==========
5. யுவர் ஆனர், என் சார்பா வாதாட வக்கீல் யாரும் இல்லை ..

அதுக்காக .. .. ?

நீங்களாவது என் சார்பா தீர்ப்பு சொல்லக்கூடாதா ?
==========
6. ஏண்டி அவர்தான் ஆம்பளை அப்படி நடந்துகிட்டாரு நீ என் தடுக்கலை ?

நீங்கதானே நாங்க சொல்றதை எல்லாம் தட்டாம கேட்டு நடந்தா சம்பளம் சேத்து தாரேன்னு சொன்னீங்க.
==========
7. நான் கொடுத்த ராஜினாமா கடிதத்தைக் கட்சி மேலிடத்துல வாங்க மறுத்துட்டாங்க.

ஏன் ?

பதவியில இருக்கறவங்கதான் அதெல்லாம் கொடுக்கணுமாமே.
==========

இன்றைய மெகா ஜோக்:

8. உன் மனைவிக்கும் உங்கம்மாவிற்கும் சண்டை வந்தா நீயும் உங்கப்பாவும் எந்த பக்கம் இருப்பீங்க ?

நான் வாசல் பக்கமா எங்கப்பா கொல்லைப் பக்கமா.

பிட்டு - 24

1. வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா?

ஆமாங்க, இப்போதைக்கு சின்ன வீடு போதும்னு ஜோசியர் சொன்னார்..
==========
2. ஆப்பரேஷனில் உங்க மாமியார் பிழைச்சுட்டாங்க..

எதுக்கும் இன்னொரு தரம் ட்ரை பண்ணிப் பாருங்க டாக்டர்..
==========
3. உங்க கணவருக்கு எங்காவது ஓடிப்போகனும்னு போல தோணிக்கிட்டே இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..

சரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை.. என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க..
==========
4. கல்யாணப் பெண்ணைப் பார்த்தா கொஞ்சம் வயசான மாதிரி தெரியுது..

நீங்க சத்திரம்; மாறி வந்திட்டீங்க போல.. இங்க நடக்கறது 60-ம் கல்யாணம்..
==========
5. டாக்டர் 22-ம் நம்பர் ரூம்ல வச்சிருந்த பாடியைக் காணல.. டாக்டர்..

சரி சரி கவலைப் படாதே புதுசா ஒண்ணு நானே வாங்கித் தரேன்..
==========
6. அரசே.. நாம் மோசம் போயிட்டோம்.

என்னாச்சு மந்திரியாரே?

இப்பொழுது நடக்கும் போரில் நமது படைத் தளபதி போர் ஃபிக்ஸிங் செய்து தோற்றுக்கொண்டிருக்கிறா மன்னா!
==========
7. எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?

பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறhன்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே.. .
=========

இன்றைய மெகா ஜோக்:

8. அவன் தற்கொலை செய்து கொள்வதாக முடிவு பண்ணினான். விஷம் அருந்தலாமா.. தூக்கில் தொங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, கடைசியில்.. ரெயில்

முன் பாய்வதுதான் சரியான ஐடியாவாக தோன்றியது..

தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் தன் முடிவைச் சொல்லிவிட்டு, ஒரு நாள் சாயந்திரம் ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளோடு புறப்பட்டான். அத்தனை மூட்டைகளிலும்

சிக்கன், மட்டன் என்று அசத்தலான சாப்பாட்டு அயிட்டங்கள்.

பார்த்தவர்கள் வியந்தார்கள்.

ஆமா.. ரெயில்ல பாய்ஞ்சு தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொல்றே.. அப்புறம் எதுக்கு இத்தனை சாப்பாடு மூட்டைகள்?

அவன் சொன்னான்.. சரியாப் போச்சு போங்க. அந்த விவஸ்தை கெட்ட ரயில் லேட்டா வந்துச்சுன்னா, பசியிலேயே நான் செத்துடமாட்டேனா?

பிட்டு - 23

1. போலீஸ் : எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்க மாட்டோம்.

ராமு: என்ன சார், அநியாயமா இருக்கு. அப்ப என் தலையில முடி வளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?
==========
2.வாணி : என்னங்க இது? கலர் போட்டோன்னு எடுத்தீங்க! புடவையெல்லாம் கலர் சரியா விழலையே.

போட்டோகிராபர்: பிலிமைக் கழுவும்போது சாயம் போயிட்டுதும்மா!
==========
3. நோயாளியின் உறவினர்: டாக்டர், ஆபரேஷன் எவ்வளவு நேரம் நடக்கும்?"

டாக்டர் : ஐந்து நிமிஷத்துலயும் முடியலாம், ஐந்து மணி நேரமும் ஆகலாம். எதுவும், நோயாளியோட உயிர் போறதை வைச்சுத்தான் சொல்ல முடியும்!
==========
4. சோமு: சார், அந்த ஜோசியக்காரனை நம்பாதீங்க!

ராமு: ஏன், என்னாச்சு?

சோமு: அவங்கிட்ட 15 நாளுக்கு முன்னாடி ஜோசியம் பாத்தேன், சீக்கிரம் நீங்க ரெண்டு சக்கர வாகனம் வாங்குவீங்கன்னு சொன்னான்.

ராமு: நல்லது தானே, சந்தோஷப் படுங்க, அதுக்கு என்ன இப்போ?

சோமு: ஆக்ஸிடெண்ட்ல கால்ல அடிபட்டு சக்கர நாற்காலி வாங்க வேண்டியதாகப் போச்சு சார்!
==========
5. கணவன்: `தொப்பு'ன்னு சத்தம் கேட்டுதே... கொல்லை கிணற்றில் குதித்தது யார்னு போய்ப் பார்த்துவிட்டு வா!

மனைவி: முடியாது! குதிச்சது உங்கம்மா இல்லைன்னு தெரிஞ்சா, அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கவே முடியாது!
==========
6. இல்லத்தரசி: நீ இப்படி மெதுவாக வேலை செய்து கொண்டிருந்தால் நான் வேறு ஒரு வேலைக்காரியை பார்த்துக் கொள்ள வேண்டியது தான்!

வேலைக்காரி: சீக்கிரம் பாருங்கள் அம்மா, எனக்கும் ஒருத்தியாக வேலை செய்வது பிடிக்கவில்லை!
==========
7. சோமு: என் பொண்ணை, பொண்ணு பார்க்க வந்தவங்க, "என்னெல்லாம் போடுவீங்க"ன்னு கேட்கறாங்க.

ராமு: நியாயம்தானே.

சோமு: யோவ், அவங்க கேட்கிறது, பொண்ணு பார்க்க வரும்போது என்ன டிபன் போடுவீங்கன்னுய்யா.
==========

இன்றைய மெகா ஜோக்:

8. சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?

கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?

கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.

கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும்.

அப்போ கல்யாணத்துக்குப் பின்னாடி?

அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை.

பிட்டு - 22

1. ஊஞ்சலாடுவது என் பொழுது போக்கு என்கிறார் உங்கள் மனைவி, உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு ?

ஹி... ஹி.... ஊஞ்சலாட்டுறதுங்க!
==========
2. உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே.....? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!
==========
3. இந்த ஊர்ல திருட்டு பயம் ஜாஸ்தின்னு பேசிக்கிறாங்க. நீங்க எப்படி இவ்வளவு தைரியமா போறீங்க ?

எனக்கு போலீஸ்னாதான் பயமே!
==========
4. காரோட என் மனைவியைக் காணோம்னு நான் புகார் கொடுத்திருந்தேனே, அதை நான் வாபஸ் வாங்கிக்கிறேன் சார்!

ஏன் ?

கார் கிடைச்சிடுச்சு.
==========
5. ஆசிரியர்: பரீட்சை அறையில் ஏண்டா தூங்குறே ?

மாணவன்: பதில் தெரியாட்டி முழிச்சுக்கிட்டு இருக்காதே-னு நீங்கதானே சொன்னீங்க.
==========
6. வாணி: புடவை தீப்பிடிச்சிகிட்டு உன் மாமியாரைக் காப்பாத்த நினைச்சதுக்காக உன் மேலே கொலை பழி விழுந்துதா ஏன் ?

ராணி: தீயை அணைக்க நான் அவங்களைக் கிணத்தக்குள்ளே தள்ளினது தப்பாம்.
==========
7. ஹலோ போலீஸ் ஸ்டேஷனா இங்க டி.வி-ல தொடர் பார்க்கவிடாம ஒரத்தர் குறுக்கம் நெடுக்கமா என் வீட்டுல நடந்து தொலைக்கறார்

யார்னு விசாரிச்சீங்களா ?

விசாரிச்சேன். யாரோ திருடனாம்.
==========

இன்றைய மெகா ஜோக்:

8. சோமு: வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

ராமு: அதனால...?

சோமு: வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

பிட்டு - 21

1. உன் வீட்டுக்காரர் என்ன எப்ப பார்த்தாலும் தலைல கட்டு போட்டுட்டிருக்காரு ?

நான்தான் சொன்னேனே... அவரு சின்ன விஷயத்துக்கெல்லாம் மண்டையைப் போட்டு உடைச்சுப்பாருன்னு...
==========
2. உங்க மனைவிகிட்டே உங்களுக்குப் பிடிச்ச விஷயம் எது ?

என்ன சண்டை வந்தாலும், கோபம் இருந்தாலும், என்னோட சமையல்ல மட்டும் குறையே சொல்ல மாட்டா
==========
3. ஒரு ஓட்டோட மதிப்பு பத்து லட்சம்னு வேட்பாளர் புலம்பறாரே, ஏன் ?

எலக்ஷனில் ஒரு கோடி செலவு பண்ணியும் அவருக்கு பத்து ஓட்டுதானே விழுந்திருக்கு
==========
4. என்ன பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பாத்ரூம் பக்கத்துல உட்கார வெச்சிருக்கீங்க...?

திடீர்னு அவங்க பெண்ணை பாட்டு பாடச் சொல்லிட்டாங்கன்னா... என் பொண்ணுக்கு பாத்ரூம்ல பாடிதான் பழக்கம்.
==========
5. நன்றி கெட்ட நாய் ஜாக்கிரதை-ன்னு போர்டு மாட்டி இருக்கீங்களே ஏன் ?

பின்னே என்ன சார் ? வளர்த்த என்னையே கடிச்சிடுச்சே
==========
6. என்னய்யா மேடையில ஓடா வந்து விழுது...

ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை யாரோ தப்பா புரிஞ்சிகிட்டாங்க...
==========
7. நண்டு கர்ப்பமா இருக்கு

அப்போ, ப்ரக்நண்டு-ன்னு சொல்லு
==========

இன்றைய மெகா ஜோக்:

8. உன் மனைவிக்கு இடது கைப் பழக்கமா ?

எப்படிக் கண்டுபிடிச்சே ?

உன் வலது கன்னம் வீங்கி இருக்கே

பிட்டு - 20

1. ஹலோ டாக்டர் ஸ்ரீதரா ..? அவசரமா ஒரு நூறு ரூபாய் இருந்தா கொடுக்க முடியுமா ..?

யாருய்யா நீ டெலிபோன்ல கடன் கேட்கறது ?

நான்தான் உங்க பேஷண்ட்... நீங்கதானே ஏதாவது அவசரம்னா உடனே போன் பண்ணச் சொன்னீங்க
===========
2. ஏன் சார் இவர் ஃபைலைக் கட்டிப்பிடிச்சு சிரிச்சுக்கிட்டே இருக்கார் ?

எப்பவும் ஆபீஸ்ல ஃபைலைக் கட்டிக்கிட்டு அழறீங்களே.. .னு அவர் மனைவி திட்டினாங்களாம்.. . அதான்
==========
3. டாக்டர்.. . இந்த வியாதியோட போராடி வாழவே பிடிக்கலை. ஏதாவது விஷஊசி இருந்தா போட்டுக் கொன்னுடுங்க

நீங்க இப்படிக் கவலைப் படக்கூடாது. அதுக்காகத்தானே ஆபரேஷன் பண்றேன்
==========
4. ஆப்பக்காரக் கிழவி பிஸியா வியாபாரம் பார்த்துட்டிருந்தப்போ திடீர்னு அடைமழை .. .. இடி, மின்னல் .. .. கடையைச் சாத்திட்டுப் போன கிழவி மறுநாள் காலையில வந்து

பார்த்தப்போ ஆச்சரியமாயிட்டாங்க .. ..

ஏன் .. .. ?

கடையில இருந்த ஆப்பமெல்லாம் இடியாப்பமா மாறிப் போயிருந்தது
==========
5. வளவளன்னு பேசாம, சுருக்கமா ஒரே வார்த்தையிலே புரியும்படி சொல்லு.

செலவுக்கு 1000 ரூபாய் கடன் வேணும்
==========
6. என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு

ஏன் என்ன ஆச்சு ?

எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்
==========
7. வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன். .

வெயிலுக்கா... அதுக்கு ஏண்டா வெளியூர் போறே ? சும்மா வெளியிலே போய் நில்லு... போதும்.. .
==========

இன்றைய மெகா ஜோக்:

8. பக்தன்: சுவாமிஜி, உலகம் ஏன் இப்படி சுத்துது?

சுவாமிஜி: ஒரு குவார்ட்டர் தண்ணி அடிச்சா மனுஷனே சுத்தும் போது, 3 குவார்ட்டர் தண்ணி இருக்கிற உலகம் ஏன் சுத்தக் கூடாது?

பிட்டு - 19

1. கு.க. ஆபரேஷன், மேஜர் ஆபரேஷனா. இல்ல மைனர் ஆபரேஷனா டாக்டர். ..?

மனைவிக்குப் பண்ணினா மேஜர் ஆபரேஷன். சின்ன வீட்டுக்கு பண்ணினா மைனர் ஆபரேஷன்.. .
==========
2. இரும்புக் கடைக்காரர் பையனோட நெருங்கிப் பழகினது ரொம்பத் தப்பாப் போச்சுடி .. ..

ஏன் - என்ன சொல்றhன் .. .. ?

கல்யாணப் பேச்சை எடுத்ததுமே கம்பி நீட்டிட்டானே .. ..
==========
3. அவ தன் மாமியாரோட அஸ்தியை சந்திர மணடலத்துல தூவப் போறாளாம்

ஏன் .. .. ?

பூமில போட்டா மாமியார் எங்க திரும்ப வந்துடுவாளோன்னு பயமாம்
==========
4. தலைவரை வரவேற்க, மாலையும் கையுமா சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னா வராம எங்கேய்யா போய்த் தொலைஞ்சே .. ..

ஸ்டேஷன்னு நீங்க சொன்னதை நான் தப்பாப் புரிஞ்சுகிட்டு, மாலையோட சென்ட்ரல் ஜெயிலுக்குப் போயிட்டேன் வாத்யாரே .. ..
==========
5. ஒரு வார்த்தையை மாத்திச் சொன்னதால வீடே நாறிப் போச்சு

அப்படி என்ன சொன்னீங்க ?

வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை இருந்து சாப்பிட்டுப் போங்கன்னு சொல்றதுக்கு பதில் சாப்பிட்டு இருந்துட்டுப் போங்கன்னு சொல்லிட்டேன அவ்வளவுதான், டாய்லெட்டே

நாறிப் போச்சு
==========
6. உங்க பையன் படிப்புல இவ்வளவு பெரிய சாதனை செஞ்சதுக்கு நீங்க ஊக்குவித்ததுதானே முதல் காரணம்.. .

தப்பா சொல்றீங்க.. . பாக்கு வித்துதான் என் பையனை இவ்வளவு தூரம் படிக்க வெச்சேன்
==========
7. எனக்கு வந்திருக்கிற இதே முதுகுவலி, எங்க தாத்தாவுக்கும்கூட இருந்துச்சு டாக்டர்

வம்சாவலினு சொல்லுங்க
==========

இன்றைய மெகா ஜோக்:

8. ஒரு ஓட்டல்ல ரெண்டு பேரு உட்கார்ந்திருந்தாங்க. தூரத்துல ரெண்டு பெண்கள் வர்றதைப் பார்த்தும். படக்-னு ஒருத்தன் ஹெல்மெட்டை எடுத்துத் தலையில

மாட்டிக்கிட்டான். இன்னொருத்தன் கட்டுனு டேபிள் அடியில் பதுங்கிட்டான்.

அந்தப் பெண்கள் கடந்து போனப்புறம் என்ன பிராப்ளம் ?னு கேட்டான் முதல் ஆள்.

அதோ போறாங்களே ரெண்டு பொண்ணுங்க அவங்கள்ல ஒருத்தி என் பெண்டாட்டி .. .. இன்னொருத்தி என் கேர்ள் ஃப்ரெண்ட்

அடப்பாவி .. .. எனக்கம் அதே பிரச்னை தான் னு ஆச்சரிய்ப்பட்டான் அடுத்தவன்