1. கண்ணாடியை கழட்டிட்டா எதுவுமே தெரியமாட்டேங்குது டாக்டர்.. .
நிஜமாவா.. ?
ஆமாம், கண்ணாடியை கழட்டிட்டனா இல்லையான்னு கூட தெரியமாட்டேங்குது டாக்டர்
==========
2. சார் பீரோல வெச்சிருந்த என்னோட மொத்தப் புடவைகளும் காணாம போச்சு..
உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா. .?
தோய்க்கறதுக்கு சோம்பேறித்தனப்பட்டுட்டு என் கணவர்தான் யாருக்காவது எடுத்துக் கொடுத்துட்டாரோன்னு சந்தேகமா இருக்கு.
==========
3. எங்கப்பா வெளியே போறப்ப சட்டை போட்டா பேண்ட் போட மாட்டாரு.. . பேண்ட் போட்டா சட்டை போட மாட்டாரு.. .
ரொம்ப அசிங்கமாயிருக்குமே..
அதெப்படி அசிங்கமாயிருக்கும். .. சட்டை போட்டா பேண்ட்டுக்குப் பதிலா வேஷ்டி கட்டுவாரு.. . பேண்ட் போட்டா சட்டைக்குப் பதிலா ஜpப்பா போடுவாரு.. .
==========
4. ராத்திரி எட்டு மணி ஆனா என் கணவர் வீட்டுக் கதவைச் சாத்திடறhரு.. .
புதுசா கல்யாணம் ஆச்சே., கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும்.
அட நீ வேற அவரு பாத்திரம் தேய்க்கற விஷயம் வெளியே யாருக்கும் தெரியக் கூடாதாம்.
==========
5. சார் நான் பரீட்சை எழுதறப்ப இவனைப் பார்த்துதான் எழுதினேன்.
சரி.. . இண்டர்வ்யூக்கு இவரை ஏன் கூட்டிட்டு வந்தீங்க ?
எனக்கு பதில் தெரியாத கேள்வியைக் கேட்டீங்கன்னா இவரைக் கேட்டு பதில் சொல்வேன்.
==========
6. ஏன் சார் உங்களுடையது காதல் திருமணமா ?
எப்படி கரெக்டா சொன்னீங்க ?
இவ்வளவு மோசமான சமையலை இவ்வளவு ருசிச்சு சாப்பிடறீங்களே அதை வச்சுதான் கண்டுபிடிச்சேன்
==========
7. தலைதீபாவளிக்கு உன்னோட மாமனார் முறைப்படி எல்லாம் செஞ்சாரா.. ?
ம்.. . முறைப்படி செஞ்சார்.. . ஆனா, முறைச்சபடி செஞ்சார்
==========
இன்றைய மினி பிட்டு ஜோக்கு:
8, (முதலிரவு அறையில்) என்னது.. . அங்கேயே வெட்கப்பட்டுக்கிட்டு நிக்கிறே.. .? உனக்கு யாரும் எதுவும் சொல்லித் தரலையா.. .?
சொல்லித் தந்தாங்க. மொதல்ல அஞ்சு நிமிஷம் வெட்கப்படணும்-னு சொன்னாங்க.. அதான் பட்டுக்கிட்டிருக்கேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment