Friday, October 2, 2009

பிட்டு - 42

1. அந்த டாக்டர் என்ன, தேங்காய் வியாபாரியோட மகனா ..?

ஏன் கேட்கறீங்க.. .?

வியாதி முத்திப்போச்சான்னு பார்க்கறதுக்கு பேஷண்ட்டைத் தூக்கிக் குலுக்கி தட்டிப் பார்க்கறாரே!

==========

2. இந்த ஆபரேஷன் சக்ஸா ஆகலைனா வருத்தப்படும் முதல் ஆள் நான்தான்.

ஏன் டாக்டர்.. .?

பின்னே... நீங்க இருக்கமாட்டீங்களே... நான் மட்டும்தானே வருத்தப்பட்டு ஆகணும்!

==========

3. எதுக்கு டாக்டர், என் உடம்பிலிருந்து தேவையில்லாம ஒரு லிட்டர் ரத்தம் எடுத்திருக்கீங்க.. .?

சிகிச்சை முடிஞ்சு ஒழுங்கா ஃபீஸ் கட்டிட்டா, எடுத்த ரத்தத்தை திரும்ப உங்களுக்கே செலுத்திடுவோம்.

==========

4. இன்னும் ஒரு மணி நேரத்துல டாக்டர் உங்களுக்கு ஆபரேஷன் பண்ணப்போறார்.

ஏதாவது சாப்பிடலாங்களா ?

கடைசியா ஒரு முறை என்ன வேணாலும் சாப்பிட்டுக்குங்க.

==========

5. முகம் இருண்டு படுசோகமாக வந்த தனது கல்லூரி நண்பனை விசாரித்தான் அவன்.

மச்சி, என்னாச்சு உனக்கு ?

கம்ப்யூட்டர் வாங்கணும். .. கொஞ்சம் பணம் அனுப்புங்க-னு வீட்டுக்கு லெட்டர் போட்டிருந்தேன்.

புரிஞ்சிடுச்சு, இப்ப பணம் அனுப்ப முடியாது-னு பதில் வந்திருக்கு அதானே மேட்டர் ?

அதில்லை கம்ப்யூட்டரை வாங்கி அனுப்பியிருக்காங்க!

==========

6. அவர் பயங்கர குடிகாரர்...

இருக்கட்டும்... அதுக்காக கை பம்புல தண்ணி அடிக்கிறப்பகூட ஊறுகாயைத் தொட்டுக்கணுமா ?

==========

7. எங்க வீட்ல மாமியார் - மருமகள் சண்டைகூட டி.வி. சீரியல் மாதிரி ஆயிடுச்சு.

எப்படி ?

ஒவ்வொரு நாளும் சண்டையை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி முதல்நாள் சண்டைலேர்ந்து கொஞ்சம் போட்டுக் காட்டுவாங்க!

==========

கடைசியா இன்றைய மெகா ஜோக்கைப் படிச்சிருங்க:

8. உன் கணவர் வீட்டு வேலைய எல்லாம் முடிச்சுட்டாராம் ?

உனக்கு எப்படித் தெரியும் ?

இதோ பாரு கேபிள் டி.வி-யில் விளம்பரம் கொடுத்திருக்காரே!

No comments:

Post a Comment