Friday, October 2, 2009

பிட்டு - 44

1. தளபதியாரே, என்ன இது ? போர் நடக்கும் நேரத்தில் 7 நாள் விடுப்பு வேண்டுமா ?

ஆம் மன்னா, போர் முடிந்த அடுத்தநாளே அரண்மனைக்கு வந்து விடுவேன்.

==========

2. தலைவரே, உங்க பங்களா, ஃபேக்டரிக்கு, சினிமா தியேட்டர் இது எல்லாத்துக்கும் மக்கள் அன்புனு பேர் வச்சிருக்கீங்களே ஏன் ?

என்னோட அரசியல் வாழ்வுல மக்கள் அன்பைத் தவிர எதுவும் சம்பாதிக்கலைனு சொல்லிக்கலாமே ?

==========

3. அந்த டாக்டர் பி.எம். பார்க்கிற-வர்னு சொல்றாங்களே. அவரு பிரைம் மினிஸ்டருக்கு வைத்தியம் பார்க்கறவரா ?

அட, நீங்க ஒண்ணு.. . அவருக்கு போஸ்ட் மார்ட்டம் மட்டும்தான் பண்ணத் தெரியும். அதத்தான் சுருக்கமா பி.எம். ஸ்பெஷலிஸ்ட்ன்னு சொல்றாங்க

==========

4. அந்தத் தலைவருக்குத் தமிழ் உச்சரிப்பு சரியா வராது போலிருக்கு.

அதுக்காக முத்தமிழையும் வித்தவன்-னு பட்டப் பெயர் சூட்டிக் கூப்பிடறது கொஞ்சமும் நல்லா இல்லே.

==========

5. நீங்க ஒரு ரௌடியை அடிச்சுத் துவைச்சதுல மயங்கி, உங்க மனைவி உங்களைக் கல்யாணம் பண்ணிட்டாங்களே.. . வாழ்க்கை எப்படி இருக்கு ?

இப்ப மனைவியோட துணிமணிகளை அடிச்சுத் துவைச்சுட்டு இருக்கேன்!

==========

6. என் பையன் பென்சில் பட்டாசு கேட்டான்னு அதை வாங்கிக் கொடுத்தேன்.

அதுக்கு ஏன் சார் இப்படி அலுத்துக்கறீங்க ?

பட்டாசு பாதியிலேயே அணைஞ்சுடுச்சாம்.. . இப்போ ஷார்ப்பனர் பட்டாசு வேணும்னு கேட்கறான்.

==========

7. அமைச்சர் வீட்டில் என்ன விழா ?

புது வேலைக்காரிக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பும் செய்து வைக்கிறார்.

==========


கடைசியா பிட்டு ஜோக்குக்கு இங்கே வாங்க:


8. அரசியல் வாதியை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு.

ஏன் ?

முதலிரவை சீரணி அரங்கத்துல வச்சுக்கலாம்னு சொல்றாரு.

No comments:

Post a Comment