Friday, October 2, 2009

பிட்டு - 40

1. அந்த டைரக்டர் இதுக்கு முன்னால பஸ் கண்டக்டரா இருந்திருப்பார் போலருக்கு ?

எப்படி சொல்றே ?

கட், கட்னு சொல்லாம ஸ்டாப், ஸ்டாப்-ங்கறாரே

==========

2. ஐயா... ஒரு மாசமா இந்த நர்ஸ் உங்களுக்கு சேவை பண்ணியிருக்கலாம். அதுக்காக டிஸ்சார்ஜ் ஆகிறப்ப நர்ஸைக் கட்டிப்பிடிச்சு அழறதுக்கெல்லாம் அனுமதிக்க முடியாது!

==========

3. நேத்து மூக்குப்பிடிக்க சாப்பிட்டிங்களே... அதே சாம்பார்தான் இன்னிக்கும்.

சரி, இன்னிக்கு மூக்கைப் பிடிச்சுட்டு சாப்பிடறேன்.

==========

4. நான் என் மாமியார் எதிரே வாயையே திறக்கமாட்டேன்...

அவ்வளவு மரியாதையா ?

நீ வேற... அவங்களுக்கு சுத்தமா காது கேட்காது. எதுக்குப் பேசி வீணா நம்ம எனர்ஜியை வேஸ்ட் பண்ணணும்னுதான்

==========

5. ஆனாலும் அந்த டாக்டருக்கு ரொம்பத்தாண்டி நக்கல்

ஏண்டி...?

பல்லைப் பிடுங்கறப்போ வலிச்சா, பல்லை நல்லா கடிச்சிக்குங்கன்னு சொல்றாரே!

==========

6. பக்கத்து வீட்டு வேலைக்காரியிடம் பேசியது தப்பா போச்சு ?

ஏன் - என்னாச்சு ?

எங்க வீட்டு வேலைக்காரி என்னைத் தப்பா நினைச்சுட்டா

==========

7. என் மனைவியிடம், உனக்குப் புன்னகையே அழகா இருக்குன்னு சொன்னேன்

அதுக்கென்ன ?

உடனே அதை வாங்கித் தாங்கன்னு அரிக்க ஆரம்பிச்சிட்டா.

==========


அப்புறம் இன்றைய மெகா ஜோக்:



8. அவரு சரியான குடிகாரரா இருக்காரு...

எப்படிச் சொல்றே ?

டாக்டர் கொடுத்த டானிக்கைகூட சோடா கலந்துதான் சாப்பிடறாரு

No comments:

Post a Comment