1. எதுக்கு அந்த வாஸ்து சாஸ்திர ஜோசியரைப் போய் அடிக்கப் போனீங்க. ..?
பின்னே. .. இடதுபக்கம் இருக்கிற இதயத்தை எடுத்து வலதுபக்கம் வெச்சுட்டா நல்ல பணம் வரும்-னு சொல்றாரு.
=========
2. சார். .. நாங்க வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியே போயிருக்கும்போது யாரோ திருடன் புகுந்து வீட்டையே காலி பண்ணிட்டுப் போயிட்டான். ..
ஆச்சரியமா இருக்கே. ..
இதுக்கே ஆச்சரியப்பட்டா.. . போகும்போது வீட்டை ஒருத்தருக்கு வாடகைக்கு வேற விட்டுட்டுப் போயிட்டான் சார்.
=========
3. சாப்பிட்டு முடிச்சவுடனே, உன்னைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட என்னவோ கேட்டாரே. .. என்னவாம் ?
இதே மாதிரி சாப்பாடு எப்பவும் கிடைக்குமா ?னு கண்ணீர் மல்கக் கேட்டார்
========
4. நாம ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடப்போற விஷயம் எங்கப்பாவுக்கு தெரிஞ்ச போச்சு. ..
ஐயையோ. .. என்ன சொன்னாரு ?
போறப்ப எங்க அம்மாiவும் கூட்டிட்டுப் போகச் சொன்னாரு.
=========
5. பக்கத்து வீட்டுக்காரி நல்லாத்தானே இருக்கா. அப்புறம் ஏன் கழுத்துல சுளுக்குங்கிறா ?
அவ போட்டிருக்கிற வைர அட்டிகையை எல்லோரும் பார்க்கணுமாம். அதான்.
=========
6. கணிப்பொறிக்கும், எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம் .. .?
கணிப்பொறிக்கு மௌஸ் வெளியே இருக்கும். .. எலிப் பொறிக்கு மௌஸ் உள்ளே இருக்கும்.
=========
7. குரைக்கிற நாய் கடிக்காதுன்னு எதவைச்சு சொன்னாங்க ?
தேள் குரைக்கறதில்லை. ஆனா கடிக்குதுல்ல.
=========
இன்றைய மினி பிட்டு ஜோக்கு:
8. கார் மெக்கானிக்கைக் கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு
ஏன் ?
டெய்லி கட்டிலுக்குக் கீழே தான் படுக்கறாரு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment