Saturday, October 3, 2009

பிட்டு - 50

1. பலசரக்குக் கடை ஆரம்பிப்பதற்காகவா உன்னைக் கைது பண்ணி தண்டனை கொடுத்தார்கள் ?

ஆமாம் - கஞ்சா, அபின், பட்டை, சாராயம் போன்ற பல சரக்குகள் கடை அல்லவா ஆரம்பித்தேன்

==========

2. என்னங்க.. . எதிர்ல போற உங்க அம்மா. .. அப்பாவைத் திரும்பிப் பார்த்துகிட்டே வர்றீங்க? போய் பேச வேண்டியதுதானே!

நீ வேற.. . நாம தனிக்குடித்தனம் போனதிலேயிருந்து நான் அவங்களைத் திரும்பிப் பாக்கிறதே இல்லைன்னு எல்லார்கிட்டேயும் சொல்லி வருத்தப்பட்டாங்களாம்.. . அதான்

==========

3. தாத்தாவுக்கு இப்ப எல்லாம் பக்தி அதிகமாகி விட்டது.

அதுக்காக, ரசம் வேண்டாம் பக்தி ரசம்தான் வேண்டும் என்றா கேட்டு அடம் பண்ணறது ?

==========

4. அம்மா தீபாவளி அன்னிக்கு நான் வேலைக்கு வரமாட்டேன். ..

பரவாயில்லை அன்னிக்கு ஐயாவுக்கு ஆபீஸ் லீவுதான். ..

==========

5. தீபாவளிக்கு வந்த படங்கள்லயே உங்க படம் மட்டுந்தான் குடும்பத்தோட பாக்கற மாதிரி இருந்துச்சு

அப்படியா.. . ரொம்ப சந்தோஷம்.. . எதை வைச்சுச் சொல்றீங்க ?

மத்த படங்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல் ஆயிட்டதால, டிக்கெட் கிடைக்கல.. . உங்க படம் காலியாயிருந்ததாலே குடும்பத்தோட பாக்க முடிஞ்சதுன்னு சொல்ல வந்தேன்.

==========

6. தீபாவளிக்கு நாலு நாள் முன்னாடியே உங்க அம்மாவை வரச் சொல்லுங்க.. .

எதுக்குடி.. .?

நம்ப வீட்டு வேலைக்காரி லீவு எடுத்துனு ஊருக்குப் போறாளாம்

==========

7. அனுமதி இல்லாம பட்டாசுக்கடை வெச்சிருக்கீங்களே. .. அதிகாரிங்க வந்து கேட்க மாட்டாங்களா ?

அனுமதி வாங்கி கடை வெச்சா மட்டும் அதிகாரிங்க வந்து கேட்காமலா இருக்கப் போறாங்க

==========

இன்றைய சின்ன பிட்டு ஜோக்கு:


8. செருப்பு அழகாயிருக்குன்னு சொன்னதுக்கு அவன்கிட்ட செருப்பைக் கழட்டிக் காமிச்சது தப்பாயிடுச்சு.. .

ஏன் ?

இன்னைக்கு சேலை அழகாயிருக்குன்னு சொல்றான்

No comments:

Post a Comment