1. என்னுடைய கதை என்று ஒருவர், நம் படத்தைப் பார்த்து விட்டு கேஸ் போட்டிருக்கிறார்.
கவலைப்படாதே கேஸ் தோற்றுவிடும். ஏன்னா நம்ம படத்துல கதையே இல்லையே.
==========
2. ஒரு கல்லறைக்கு முன்னர் ஒருவர் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். நீ மட்டும் இறக்காமல் போயிருந்தால் நான் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பேன் என்று அடிக்கடி அரற்றிக் கொண்டிருந்தார். விதியை மட்டும் என்னால் மாற்ற முடியுமேயானால் உன்னைத் தான் உடனே உயிர்ப்பிப்பேன் என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவர் "ஏன் ஐயா இவர் அவ்வளவு முக்கியமானவரா?" என்று கேட்டார்.
இவரோ, "ஆமாய்யா, ரொம்ப முக்கியமானவர் தான், என் மனைவியின் முதல் கணவன் அவர்!", என்றார்.
==========
3. ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?
==========
4. மனைவி:-
எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன் :-"உன்னோட இந்த காமெடிதான்"
==========
5. என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?
அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.
==========
6. கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி:- கட்டிக்க போறது நாந்தனே
கணவன்:- துவைக்கிறவனுக்குதானே கஷ்டம் தெரியும்
==========
7. இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?
எப்படி சொல்றே?
எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவச்சுதான்.........
இன்றைய மெகா ஜோக்:
8. மாலா:- ஏண்டி கீதா நீ ஏன் துவைக்கிற. வாஷிங் மெஷின் எங்க?
கீதா:- அது ஆபீஸ் விஷயமா வெளியூர் போயி்ருக்குடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment