Saturday, October 3, 2009

பிட்டு - 66

1. இந்த மருந்தை தினமும் காலையில வெறும் வயித்துல சாப்பிடுங்க.

பனியன்கூடப் போட்டிருக்கக்கூடாதா டாக்டர் ?

==========

2. அவசியம் இருந்தால்தான் உங்களுக்கு டெஸ்டெல்லாம் எடுக்க வேண்டியது இருக்கும்

அது எப்ப தெரியும் டாக்டர் ?

லேப் வெச்சிருக்கிற என் தம்பி போன் பண்ணுவான்.

==========

3. நேற்று நான் வந்தப்போ நீங்க இல்லை, உங்க கம்பவுண்டர்தான் மருந்து கொடுத்தார்

ஐயையோ.. . என்ன ஆச்சு ?

ஒரே வேளையில குணமாயிடுச்சு

==========

4. என் மாமியார் வந்த ஆட்டோ கவுந்துடுச்சு.

ஐயையோ.. . அப்புறம் என்ன பண்ணே ?

ஆட்டோகாரனுக்கு மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுத்தேன்.. .

==========

5. நேத்து நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான் அனுப்பியிருப்பாரோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.

ஏங்க வீணா அவர்மேல பழியைப் போடுறீங்க.. .?

பின்ன என்ன.. . வரதட்சணையா வாங்கின ஐம்பதாயிரத்தை எடு-னு திருடன் கரெக்ட கேட்டானே.

==========

6. சட்டசபையில் பக்கத்துல உட்கார்ந்திருக்கிற எம்.எல்.ஏ.க்கள் கூட தொணதொண-ன்னு தலைவர் பேசிக்கிட்டே இருக்காரே, என்ன விஷயம் ?

சட்டசபையில் தலைவர் பேசவே இல்லை-ன்னு யாரும் சொல்லிடக்கூடாதுங்கறதுக்காகத்தான் இப்படிப் பேசிட்டிருக்காரு

==========

7. தலைவர், தன்னோட மாமாவும் தாத்தாவும் சுதந்திரப் போராட்ட வீரர்கள்-னு சொல்றது நிஜமாய்யா ?

அவர் சொல்றது, நேருவையும், காந்தியையும்யா

==========

இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:

8. கணவன்: என்னைக்கேட்டு யாராவது போன் பண்ணினா ”நான் வீட்டில இல்லை”ன்னு சொல்லிடு.

மனைவி: சரிங்க

அப்புறம் ஒரு போன் வந்தது. மனைவி போனை எடுத்து, “அவர் வீட்டில இருக்கார்”னு சொல்லிட்டாங்க.

கணவன்: நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்றே, நான் தான் வீட்டில இல்லைன்னு சொல்லச் சொன்னேன்ல

மனைவி: சும்மா கத்தாதீங்க. இது எனக்கு வந்த கால்.

No comments:

Post a Comment