1. அந்தக் காலத்துல ஏன் தட்டுங்கள் திறக்கப்படும்-னு சொல்லியிருக்காங்க ?
அப்பா காலிங்கெல் கிடையாது.. . அதான்
==========
2. டெலிபோனை எடுத்து என்னனு கேளு, போ
டெலிபோன் அடிக்கலையே அத்தை
ஆமா.. . அது அடிக்கிற வரைக்கும் காத்திருக்கணுமா ? நீயே போய் எடுத்தா குறைஞ்சு போயிடுவியாக்கும் ?
==========
3. தெரியாத்தனமா, பூசணிக்காய் வியாபாரம் செய்யறவர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிட்டேன்.
சமையல்ல பூசணிக்காயா ?
அதில்ல. தாம்பூலப் பையில் ஆளுக்கொரு பூசணிக்காய்.. .தூக்கிட்டு வந்ததில் ரெண்டு கையும் செம வலி
==========
4. நேத்து எங்க தலைவர், தொகுதிக்கு குறை கேட்கப் போயிருந்தப்ப ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சூழ்ந்துக்கிட்டு குரைக்க ஆரம்பிச்சிட்டுது
அப்படின்னா உங்க தலைவர் தொகுதிக்கு குரை கேட்கப் போனார்-னு சொல்லு.
==========
5. தலைவர் பேசும்போதெல்லாம் ரெண்டு மைக் வைக்கிறாங்களே.. . ஏன் ?
அவருக்கு ரெட்டை நாக்காம்
==========
6. பொண்ணு போட்டோவை மாப்பிள்ளைகிட்ட ஆபீஸ்ல கொண்டு போய்க் காட்டினது தப்பாப் போச்சு
ஏன் ?
தூக்கக் கலக்கத்துல இருக்கிறப்ப என்னை ஏமாத்திட்டீங்கன்னு சொல்றாரு
==========
7. கமல் ரசிகையை காதலிச்சது நல்லதாப் போச்சு
ஏன் ?
நான் முத்தம் கேட்கறதுக்குள்ள அவளே குடுத்துடறா.
இன்றைய மெகா பிட்டு ஜோக்:
8. சார்.. . இன்னைக்குக் குலுக்கலை வாங்கிட்டுப் போங்க.. காலையிலே யோகலட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப்போறா!
யோவ். .. போனவாரம் நான் தனலட்சுமி வீட்டுக் கதைவைத்தட்ன விவகாரமே இன்னமும் தீரலை.. .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment