Saturday, October 3, 2009

பிட்டு - 65

1. என்ன டாக்டர், திடீர்னு கண்ணை மூடிக்கிட்டீங்க ?

பார்வை நேரம் முடிஞ்சிடுச்சு போயிட்டு நாளைக்கு வாங்க

==========

2. உங்க வீட்டுக்கு பின்னால இருக்கிற பெரிய கிரவுண்டு யாருது ?

அதெல்லாம். என்னோடதுதான்

உங்களுக்குப் பெரிய பேக்கிரவுண்டே இருக்குன்னு சொல்லுங்க

==========

3. உங்க பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வைங்க.. ரொம்பத் திமிரா பேசுறான்

என்ன பேசினான் ?

ஏண்டா ரெண்டு நாளா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டான்.. . மதியாதார் தலைவாசல் மிதிக்க வேணாம்-னு நீங்கதானே சொன்னீங்கங்கறான்

==========

4. சரக்கு மாஸ்டர் தேவைங்கற விளம்பரத்தைப் பார்த்துட்டு அப்ளிகேஷன் போட்டியே, என்ன ஆச்சு ?

அங்கே போனப்புறம்தான் சொல்றாங்க, கள்ளச் சாராயம் காய்ச்சணும்-னு

==========

5. வானம் கூட குடிக்கும் போலிருக்கு.. .பின்ன இன்றும் வானம் தெளிவாக இருக்கும்-னு ரேடியோல சொன்னாங்களே.. .

==========

6. அந்த நடிகருக்குக் கொஞ்சம்கூட டான்ஸ் ஆட வராதே.. . உங்க படத்திலே மட்டும் இவ்வளவு பிரமாதமா ஆடறாரே.. . எப்படி ?

அவரோட மனைவியைக் கூட்டி வந்து எதிரில் நிறுத்தினோம். அவர் உடம்பு தன்னாலே ஆட ஆரம்பிச்சுட்டது.

==========

7.வைக்கோல் சாப்பிட்டா கண் பார்வைக்கு நல்லது

சும்மா அளக்காதே.. .

உண்மையாதான் சொல்றேன்.. . எந்த மாடாவது மூக்குக்கண்ணாடி போட்டிருக்கா ?

==========


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:

8. காதலில் சைவம், அசைவம்னு ரெண்டு வகை இருக்கு. உதாரணம் சொல்லு பார்ப்போம்.

கதாநாயகி தொப்புளில் ஹீரோ தோசை சுட்டா அது சைவம். ஆம்லெட் போட்டா அது அசைவம்.

No comments:

Post a Comment