Saturday, October 3, 2009

பிட்டு - 53

1. தேர்தல் பரபரப்பு ஊரெங்கும் உச்சகட்டத்தில் இருந்த சமயம்.. . பக்கத்து ஊரில் வோட்டு வேட்டையாட ஒரு ஸ்பெஷல் பேருந்தில் பயணமாகிக் கொண்டிருந்தது அரசியல்வாதிகள் குழு ஒன்று. எதிர்பாராதவிதமாக அந்தப் பேருந்து ஒரு மரத்தின்மீது மோதி, மிகப் பெரும் விபத்துக்குள்ளானது.

விபத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு விவசாயி ஓடோடி வந்தார். ஸ்பாட்டை ஒரு வலம் வந்தார். பிறகு என்ன நினைத்தாரோ. .. ஆழமான குழிதோண்டி, விபத்தில் சிக்கிய ஒவ்வொருவரையும் புதைக்க ஆரம்பித்துவிட்டார்.

மறுநாள். .. விஷயமறிந்து வந்த உள்ளூர் போலீஸ் அந்த விவசாயியிடம் கேட்டது. எல்லோரையும் அக்கறையாகப் புதைத்து விட்டீர்கள். .. சரி ஆனால், அந்த விபத்தில் ஒருவர்கூடவா உயிர் பிழைக்கவில்லை ?

விவசாயி சொன்னார். சிலபேர் தாங்கள் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் நமக்குத்தான் தெரியுமே. .. அரசியல்வாதிகள் எந்த அளவுக்குப் பொய் சொல்வார்கள் என்று!

==========

2. உங்க மாமியாருக்குப் பண்ண ஆபரேஷன்ல ஒரு சின்னத் தப்பு நடந்துடுத்து. ..

என்ன டாக்டர். .. நீங்க பெரிய தப்பு பண்ணுவீங்கங்கிற நம்பிக்கைலதானே உங்ககிட்டே கூட்டிட்டு வந்தேன்.

==========

3. அந்தக் காப்பி கொட்டை கடையில என்ன பி.ஏ. காப்பி, பி.காம் காப்பின்னு போர்டு போட்டிருக்கு ?

டிகிரி காப்பியாம்.

==========

4. என் கணவர் தோசை சுட்டுப் போட்டுக்கிட்டே இருப்பார். எத்தனை-ன்னு கணக்குப் பார்க்கமாட்டார். ..

ஏன் ?

அவருக்குச் சுட்டுப் போட்டாலும் கணக்கு வராது. அதான்.

==========

5. அர்ச்சனை உங்கள் பெயருக்கா. .?

சாமி பெயருக்கே பண்ணுங்க. .. எனக்குத் தினமும் வீட்டில் நடக்குது

==========

6. டாக்டர் என் மாமியாருக்கு இப்போ உடல்நிலை எப்படி இருக்கு ?

மெகா சீரியல் மாதிரி. ..

புரியலையே ?

இழுத்துக்கிட்டே இருக்கு

==========

7. நான் எப்பவுமே மத்தவங்க கையை எதிர்பார்க்க மாட்டேன்

அதுக்குனு நீங்களே என் பாக்கெட்ல கையை விட்டு பணத்தைக் கடனா எடுத்துக்கறது நல்லாயில்லை

==========


இன்றைய சிறப்பு மினி பிட்டு ஜோக்கு:


8. மாறு வேடத்தில் அந்தப்புரத்துக்குச் சோதனைக்குச் சென்றது தவறாகிவிட்டது அமைச்சரே!

ஏன் மன்னா ?

தினமும் மன்னருக்குத் தெரியாமல் வந்து போங்கள் என்று அரசியார் சொல்லிவிட்டார்!

No comments:

Post a Comment