Saturday, October 3, 2009

பிட்டு - 57

1. எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை நடந்து. இன்னியோட வருஷம் ஆறு ஓடிப்போச்சு

ஆறு வருஷமா உங்களுக்குள்ள ஒரு பிரச்சினையும் கிடையாதா .. .?

இன்னைக்கு அவுங்களோட 8-வது திவசம் டீ!

==========

2. ரொம்ப லோ பட்ஜெட்ல படம் எடுக்கிறhர் போல இருக்கு.

எப்படிச் சொல்றே ?

ஸ்டோரி டிஸ்கஷனுக்கு எல்லோரையும் டீக்கடைக்கு வரச்சொல்லியிருக்கிறாரே.. .*

==========

3. உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி தெரியலையே.

நான் உங்களை தர்ம மகாராஜான்னு சொன்னேனே, நீங்க என்ன அப்படியா இருக்கீங்க ?

==========

4. எள்ளுன்னா எண்ணெயோட வந்து நிப்பானே உங்க பையன், இப்ப என்ன பண்றான் ?

வீட்டுல கல்யாணப் பேச்சை எடுத்த உடனே கையில் குழந்தையோட வந்து நிக்கிறான்.

==========

5. ஏண்டா.. . மாட்டுக்கு வாய் மட்டும் வரையாம விட்டிருக்கே

நீங்கதானே சார் சொன்னீங்க அது வாயில்லாப் பிராணினு

==========

6. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிற தலைவர் எதுக்குக் கோபப்படுகிறார் ?

மலர் வளையத்தோட எதிர்க்கட்சிக்காரங்க உள்ளே வந்துட்டாங்களாம்

==========

7. கறுப்பா இருக்கிற பொண்ணுக்குப் பத்து பவுன் போடறாங்களாம். ஒரு கால் நொண்டிப் பொண்ணுக்குப் பதினைஞ்சி பவுன் போடறாங்களாம். எது வேணும் ?

ஹீ.. . ஹீ.. . தரகரே.. .கறுப்புக் கலர்ல நொண்டிப் பொண்ணு பாருங்களேன்


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:


8. ஒரு பொம்பளையை டீக்கடை மாஸ்டரா போட்டது தப்பாப் போச்சு.

ஏன் ?

வர்றவங்க எல்லாம் அவகிட்ட ஆடை இல்லாம டீ போடுங்கன்னு கேட்கறாங்க!

No comments:

Post a Comment