Saturday, October 3, 2009

பிட்டு - 56

1. என்ன இது சாம்பார்ல பிஸ்கெட் வாசனை வருது

உப்பு தீர்ந்து போச்சு. .. அதனால சால்ட் பிஸ்கட் ரெண்டு போட்டேன்

==========

2. நீச்சல் போட்டியில முதல்ல வந்தவர் ஏன் மெடல் வாங்கறதுக்குத் தண்ணியவிட்டு வெளியே வரமாட்டேங்கறhரு ?

ரெண்டாவதா வந்தவர் வெறுப்புல இவரோட ஸ்விம்மிங் சூட்டை உருவிட்டாராம்

==========

3. உங்க பையன் வருங்காலத்துல பெரிய மெகா சீரியல் டைரக்டரா வருவான்

எப்படிச் சொல்றீங்க ?

பின்னே.. . ஒரு வரியில பதில் சொல்லக் கூடிய கேள்விக்கெல்லாம்கூட பத்து பக்கத்துக்கு விடை எழுதி வெச்சிருக்கானே

==========

4. ஒரு நாள் அதிகாலை. தூங்கிக் கொண்டிருந்த தனது மகனைப் படுக்கையிலிருந்து எழுப்பினார் அந்த அம்மா.

”எழுந்திரு மகனே. .. பள்ளிக்கூடம் போக நேரமாச்சு”

”முக்கல் முனகலோடு லேசாக கண்திறந்து பார்த்த மகன், ம்.. . எனக்குப் பள்ளிக்கூடம் போகவே பிடிக்கலை”

”சரி, ஏன் பள்ளிக்குப் போகப் பிடிக்கலை.. . ரெண்டு காரணம் சொல்லு ?”

”அதுவா.. . பசங்களுக்கும் என்னைப் பிடிக்கலை.. . வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலை. . போதுமா ?”

”அதெல்லாம் ஒண்ணுமில்லை.. . எழுந்திரு. .. பள்ளிக்கூடம் டயம் ஆச்சு”

”சரி, பள்ளிக்கு நான் ஏன் போகணும்கிறதுக்கு நீங்க ரெண்டு காரணம் சொல்லுங்க ?”

”காரணமா.. . ஒண்ணு, உனக்கு 52 வயசாச்சு. .. ரெண்டு, நீ அந்தப் பள்ளிக்கு பிரின்ஸிபால்”

==========

5. ஒரு இருபது ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி

அது என்னய்யா இருபது ரூபாய் கணக்கு ?

அர்ஜெண்ட்டா பிரவுஸிங் பண்ண வேண்டியிருக்கு சாமி

==========

6. இந்த மருந்தைச் சாப்பிடுங்க சரியா போச்சுனா வந்து பாருங்க. ..

சரியாப் போச்சுனா எதுக்கு டாக்டர் வரணும். .?

சரியாப் போச்சுனான்னு நான் சொன்னது மருந்தை.

==========

7. பொண்டாட்டிக்கு குந்துமணி நகைகூட செய்துபோட முடியாத உனக்கெல்லாம் கல்யாணம் எதுக்குடான்னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டுட்டுப் போறான்.

யாரு. . மாமனாரா ?

ஊகூம், வீட்டுக்கு வந்திருந்த திருடன்


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:

8. என் வீட்டுக்காரர் எங்கேயும் வேலைக்குப் போகலைனாக்கூட அவருக்கு பந்தாவுல ஒண்ணும் குறையில்லை.. .

ஏன் ?

நான் சம்பளம் வாங்கிக் கொடுத்த உடனே போய் மல்லிகைப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு வந்துடுறாரு

No comments:

Post a Comment