1. டாக்டர்.. . என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற மாதிரி கனவு வருது.. .
இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா ?
ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை இல்லே உதைக்கிறாரு.
==========
2. டாக்டர் .. . என் கணவர் தனக்குத்தானே பேசிக்கிறாரு.. .
அதுக்குக்கூட அவருக்கு உரிமை கிடையாதா மேடம்.. .?
==========
3. இவ்வளவு அழகா எனக்கு லெட்டர் எழுதியிருக்கானே ஒருத்தன், இவனைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க ?
படிச்சவன்னு தோணுது.
தப்பு. படிச்சவன் நான்தான். இவன் எழுதினவன்.
==========
4. ஹலோ டாக்டர், என் மாமியார் மூச்சு விட முடியாம ரொம்பக் கஷ்டப்படறாங்க
உடனே இங்கே கூட்டிண்டு வாங்க.
இதோ, மேக்கப் போட்டுண்டு ஒரு மணி நேரத்துக்குள்ளே வரேன்!
==========
5. வர வர எனக்கு வர்ற கனவு கூட டி.வி. நிகழ்ச்சி மாதிரி ஆயிடுத்து.
ஏன்...?
கனவு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஏகப்பட்ட விளம்பரம் வருது.
==========
6. இளவரசே வீரமுடன் வேட்டைக்கு புறப்பட்ட நீங்கள் ஏன் தலை தெறிக்க, ஓடி வருகிறீர்கள் ?
போய்யா, போற வழியில் ஒரு சொறிநாய் துரத்திட்டு வருது.
==========
7. தலைவர் ஏன் இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்காரு ?
அவரோட சின்ன வீடு யார் கூடவோ ஒடிட்டாங்களாம்.
==========
இன்றைய சின்ன பிட்டு ஜோக்கு:
8. வேகப் பந்து வீச்சாளரைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா... எப்படி ?
பாஸ்ட் நைட் கொண்டாடிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment