Saturday, October 3, 2009

பிட்டு - 72

1. அந்த காதல் ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வைச்சது தப்பாப் போச்சு ஏட்டைய்யா..

ஏன் சார்..

இப்போ வளைகாப்பு பண்ணி வையுங்கன்னு வந்து நிக்கிறாங்க.

=========

2. .உங்க கணவருக்கு எங்காவது ஓடிப்போகனும்னு போல தோணிக்கிட்டே இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..

சரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை.. என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க.

=========

3. என் சம்பந்தி அரைகுறையா எதையோ தெரிஞ்சுக்கிட்டு என் பொண்ணுக்கு வைரஸ் கல் மூக்குத்தி ஒண்ணு செஞ்சி போட சொல்றாராம்..

=========

4. அடுத்ததாக நம் தலைவர் கட்சியில் துரோகம் செய்த சில முக்கிய புள்ளிகளை மேடையிலிருந்து தூக்கியெறிய இருப்பதால் அருகில் அமர்ந்துள்ள அணைவரும் சற்று தள்ளி அமர்ந்து

கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

==========

5. அவன் தற்கொலை செய்து கொள்வதாக முடிவு பண்ணினான். விஷம் அருந்தலாமா.. தூக்கில் தொங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, கடைசியில்.. ரெயில் முன்

பாய்வதுதான் சரியான ஐடியாவாக தோன்றியது..

தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் தன் முடிவைச் சொல்லிவிட்டு, ஒரு நாள் சாயந்திரம் ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளோடு புறப்பட்டான். அத்தனை மூட்டைகளிலும் சிக்கன், மட்டன்

என்று அசத்தலான சாப்பாட்டு அயிட்டங்கள்

பார்த்தவர்கள் வியந்தார்கள்.

ஆமா.. ரெயில்ல பாய்ஞ்சு தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொல்றே.. அப்புறம் எதுக்கு இத்தனை சாப்பாடு மூட்டைகள்?

அவன் சொன்னான்.. சரியாப் போச்சு போங்க..அந்த வௌஸ்தை கெட்ட ரயில் லேட்டா வந்துச்சுன்னா, பசியிலேயே நான் செத்துடமாட்டேனா?

==========

6. எதுக்கு தூங்கிக்கிட்டிருக்கிற உன் கணவரை அலாரத்தை எடுத்து அடிச்சே ?

அலாரம் அடிச்சாத்தான் அவர் எழுந்திரிப்பாரு.

==========

7. பால்காரரை காதலிக்கிறதா சொன்னே .. ஆனா அவர் லாண்டரிகாரராச்சே

ஆமாண்டீ வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனச்சுட்டேன்.


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:

8. ராப்பிச்சையை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சா .. ஏன் ?

நைட் ஆனா கௌம்பிடுறாரு.

No comments:

Post a Comment