1. வக்கீல் சார், நீங்க ஏன் உங்க மனைவியை டைவர்ஸ் பண்ணினீங்க?
கேஸ் எதுவும் இல்லையான்னு கேட்டு தினமும் நச்சரிச்சுக்கிட்டு இருந்தா. அந்த எரிச்சல்ல டைவர்ஸ் பண்ணித் தொலைச்சிட்டேன்
=========
2. பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க ?
மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன்
==========
3. பக்கத்து வீட்டுப் பங்கஜத்திடம் பேசிவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்துடறேன்
அஞ்சு நிமிஷத்தில் வந்திடுவியா?
ஆமாங்க, நீங்க அரை மணிக்கு ஒரு தரம் அடுப்பில் இருக்கறதை கிண்டிவிட்டுடுங்க
==========
4. அந்த ஆள் பயங்கர குடிக்காரர்.
நிஜமாவா .. ?
ஆமாம், வெளியூருக்கு எங்கயாவது போனாகூட சரக்கு ரயில்லதான் போவாருன்னா பாருங்களேன்.
==========
5. பரீட்சை அறையில் ஏண்டா தூங்கினே ?
பதில் தெரியாட்டி முழிச்சுக்கிட்டு இருக்காதே-னு நீங்கதானே சொன்னீங்க
==========
6. வெயில் காலம் வந்தால் உனக்குப் பைத்தியம் பிடிக்குமாமே உண்மையா?
எந்த நாய் அப்படி சொல்லிச்சி...
=========
7. உங்க படத்துல இடைவேளையப்போ தேவையில்லாம் ஒரு குண்டு வெடிப்புக் காட்சி வருதே எதுக்கு?
நல்லா தூங்கிட்டிருக்கிற எல்லோரையும் எழுப்பி விடத்தான்..
========
இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:
8. டாக்டர் 22-ம் நம்பர் ரூம்ல வச்சிருந்த பாடியைக் காணல.. டாக்டர்..
சரி சரி கவலைப் படாதே புதுசா ஒண்ணு நானே வாங்கித் தரேன்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment