Friday, October 2, 2009

பிட்டு - 39

1. குருவே, சித்தி அடைய ஒரு வழி சொல்லுங்கள் குருவே?

சித்தாப்பாவுக்கே துரோகம் செய்ய நினைக்கிறாயே, நீ உருப்படுவியா...?

==========

2. 5-ம் வார்டு பேஷண்ட் பீஸ் செட்டில் பண்ணாம ஓடிட்டாரு...

அப்படியா ? அங்கே டூட்டி பார்த்த நர்ஸை கூப்பிடுங்க.

அந்த நர்ஸோடதான் ஒடிப்போய்ட்டாரு.

==========

3. நர்ஸ், இந்த மருந்தை சாப்பிட்டேன். ஒரு கிஸ் குடுங்க.

எதுக்கு ?

கசப்பான மருந்தை சாப்பிட்டதும் டாக்டர்தான் இனிப்பா ஏதாவது சேர்த்துக்குங்கன்னார்.

==========

4. மாப்ளே, எம் பொண்ணை கிளி மாதிரி வளர்த்துட்டேன். அவளை பத்திரமா பார்த்துக்கோங்க.

கவலைப்படாதீங்க மாமா. வீட்ல அடைச்சி வச்சேன்னா கதவைத் திறந்தே விடமாட்டேன்.

==========

5. சார், அந்த எக்ஸ் மினிஸ்டர் கைதியை ஒரே ஜெயில்ல ஒரு வருஷம் வெச்சது தப்பாப் போச்சு...

என்னாச்சுய்யா...?

அந்த ஜெயிலை பிளாட் போட்டு வித்துக்கிட்டு இருக்காராம்

==========

6. டாக்டர்... எங்க மாமியார் கால்ல முள்குத்திடுச்சு...

முள்ளை எடுக்கணுமா ?

முள்ளு ரொம்ப சின்னது... எடுக்கறது கஷ்டம்... காலை எடுத்துடுங்க!

==========

7. வர வர எனக்குக் கண்ணே தெரியமாட்டேங்குது.

பின்ன... அன்னிக்கு நான் தூரத்துல போயிட்டிருக்கும்போது கரெக்டா என்னைக் கூப்பிட்டீங்களே, எப்படி ?

போகும்போதுதானே ? எனக்கு வரவரதானே கண்ணு தெரியலேனு சொன்னேன்

இன்றைய மெகா ஜோக்:

8. அந்தப் பெண் ஆழ்ந்த துயரத்தில் இருந்தாள். அன்று காலையில்தான் அவள் கணவன் செத்துப் போயிருந்தான். தனது செல்லப் பிராணியான கழுதையால் உதைப்பட்டு அவன் சாவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. எதற்கெடுத்தாலும் எரிந்துவிழும், எல்லாவற்றையும் குறை சொல்லும், கண்டதற்கெல்லாம் கை ஓங்கும் கணவன்தான் என்றாலும் அவனது இழப்பு அவளை ரொம்பவே பாதித்தது.

ஆச்சு... அடுத்த சில விநாடிகளில் மண்ணுக்குள் அவன் அடக்கமாகப் போகிறhன். அந்தச் சோக நிமிடங்களில் ஆறுதல் சொல்ல வந்த ஒவ்வொருவரிடமும் அவள் தலையாட்டிக் கொண்டிருந்ததையே கவனித்துக் கொண்டிருந்தார் ஒருவர். ஆறுதல் சொல்ல வந்த ஆண்களிடம் அவள் சரி என்பது போலவும் பெண்களிடத்தில் இல்லை என்பது போலவும் அவள் தலையாட்டியது அவரை ரொம்பவே குழப்பியது. துக்கம் விசாரிப்பதில்கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்குமா என்ன ? அவளிடமே நேரில் போய்க் கேட்டார்.

அவள் சொன்னாள்... மனசு கலங்காதே என்றார்கள் ஆண்கள். அந்தக் கழுதை விலைக்குக் கிடைக்குமா.. ? என்று கேட்டார்கள் பெண்கள்

No comments:

Post a Comment