Saturday, October 3, 2009

பிட்டு - 58

1. டாக்டர்.. . இந்த ஒரு மாசத்துல என் பையன் ஒரு ரூபாய் காயின் பத்து முழுங்கிட்டான்.

இவ்வளவு நாளா ஏன் வரலே. ..?

பத்து ரூபாய் சேரட்டுமேனு பார்த்துட்டு இருந்தேன் டாக்டர்

==========


2. இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சுதான் எதையுமே சொல்ல முடியும்.

ஏன் டாக்டர். .. ரெண்டு மணி நேரம் கழிச்சு வேற யாராவது நல்ல டாக்டர் வர்றாரா .. .?

==========

3. என்னது.. . அரை டிக்கெட் வேணுமா. ..?

ஆமாப்பா. . படத்தோட முதல் பாதிதான் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. .. அத மட்டும் பார்த்துட்டுப் போயிடுறேனே ?

==========

4. ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் பண்ணிக்கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு முன்பின் தெரியாத யாரோ ஒரு பெண்மணி தன்னையே கவனித்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. ஷாப்பிங் முடிந்து பணம் கட்ட கேஷ் கௌண்ட்டர் பக்கமாக அவன் முன்னேறியபோது, அந்தப் பெண்மணி குறுக்கே வந்தாள்.

மன்னிக்கணும் நான் உன்னையே பார்த்துக்கிட்டிருந்தது உனக்குத் தர்மசங்கடமா இருந்திருக்கலாம். வேற ஒண்ணும் இல்லை. .. சமீபத்துல செத்துப் போன என் பையன் மாதிரியே நீ இருக்கே என்றாள் அந்தப் பெண்மணி உடைந்துபோன குரலில்.

ஓ.. . ஸாரி, என்ற அந்த இளைஞன், உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா. . ? என்று கேட்டான்.

ஒண்ணும் வேணாம். . நான் இப்போ கிளம்பறேன். ஓரே ஒரு வார்த்தை.. போய்ட்டு வாங்க அம்மா-னு சொன்னேன்னா போதும். என் மனசு குளிர்ந்துடும். . என்றாள். அதன்படியே அவள் கிளம்பும்போது போய்ட்டு வாங்க அம்மா என்று உருகினான் அவன்.

வரிசை மெதுவாக நகர்ந்து, கேஷ் கௌண்ட்டருக்கு அவன் போனபோது ஏகப்பட்ட தொகைக்கு ஒரு பில் நீட்டப்பட்டது.

நான் வாங்கியது கொஞ்சம் பொருட்கள்தானே.. . எப்படி இவ்வளவு பில் ? என்று கேட்டவனுக்குக் கிடைத்த பதில் - நீங்க வாங்கினது கொஞ்சம்தான். இப்ப புறப்பட்டுப் போன உங்க அம்மா வாங்கினது எக்கச்சக்கமாச்சே

==========

5. ஒரு விருந்தில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள்

நீங்க தப்பான விரல்ல கல்யாண மோதிரம் போட்டு இருக்கீங்கன்னு நெனைக்கிறேன். ..

ஆமா. .. ஏன்னா, நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே தப்பான ஆளைத்தானே

==========

6. நீங்க வாடகையே ஒழுங்கா தர்றதில்லையே ?

கொஞ்சம் பணக்கஷ்டம்.. . அதான்.. .

அப்ப நீங்க காலி பண்ணிடுங்க. நான் வீட்டை விற்கப் போறேன்.. .

அப்படி ஒரு எண்ணம் இருந்தா சொல்லுங்க.. .. நானே வீட்டை வாங்கிக்கிறேன்.. . .

==========

7. குருகுலத்தில் இளவரசரை சேர்ப்பதில் சிக்கல் வந்திருக்கிறது மகாராஜா.

என்ன விஷயம் ?

கவுன்சிலிங் முறையை இந்த வருடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்களாம்.

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:

8. உங்க கழுத்துல கிடந்த செயின்ல ரவுடி கை வைச்சப்ப நீங்க ஏன் கத்தல ?

அவனோட நோக்கம் அந்த செயின் மட்டும்தான்னு அப்ப எனக்குப் புரியாமப் போச்சு

No comments:

Post a Comment