Saturday, October 3, 2009

பிட்டு - 63

1. சார்.. .இந்தப் புடவை லேட்டஸ்ட் மாடல்.. . கட்டினா சூப்பரா இருக்கும்.

அதெல்லாம் முக்கியமில்லே.. . துவைக்கிறதுக்கு ஈசியா இருக்குமான்னு சொல்லுங்க.

==========

2. ஆஸ்பத்திரிலேர்ந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த எங்க அம்மா மயக்கம் போடுற அளவுக்கு என்ன சொன்னே ?

நீங்க நல்லபடியா உடம்பு குணமாகி வந்தா, முருகனுக்கு உங்களை அலகுக் காவடி எடுக்க வைக்கிறதா வேண்டிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன். அவ்வளவுதான்.

==========

3. என் கணவருக்கு நான்தான் சார் உலகமே.

அதான் உலகம் எப்ப அழியும்ன்னு அடிக்கடி எல்லாரையும் கேட்டுக்கிட்டிருக்காரா ?

==========

4. எனக்குச் சர்க்கரை வியாதி.. . டாக்டருக்கே ஆயிரம் ரூபாய் செலவாகிடுச்சு.

ஆச்சரியமா இருக்கு.. . உனக்கு வந்த சர்க்கரை வியாதிக்கு டாக்டருக்கு ஏன் ஆயிரம் ரூபாய் செலவாச்சு ?

==========

5. நேத்து நைட் எங்க வீட்டுக்கு வந்த திருடன் ரொம்ப அமைதியான கேரக்டர் போல.

எப்படிச் சொல்றே ?

அவன் வந்ததும் தெரியலை போனதும் தெரியலை. அப்படி காம் டைப்.

==========

6. என் கடைசித் தம்பிகிட்ட நேத்து படி படி-ன்னு சொன்னேன்.. . கேட்காம .

என்ன.. . ஃபெயில் ஆயிட்டானா ?

ம்ஹூம். .. மாடிப்படியில தடுக்கி விழுந்து காலை ஒடிச்சுக்கிட்டான்.

==========

7. அந்த டாக்டர் போலி டாக்டர்-னு எப்படி கண்டுபிடிச்சிங்க.

எலும்பு உடைஞ்சிருக்கு.. . உடனே போய் பெவிகால் வாங்கீட்டு வாங்க, அப்படின்னு சொல்றாரு.

==========


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:


8. வாங்க சார். டாக்டர் இல்லீங்களே.. . வெளில போயிருக்கார்.

சரி.. . பரவாயில்லை. நர்ஸைக் கூப்பிடுங்க வந்ததுக்கு அவங்களையாவது பார்த்துட்டுப் போயிடறேன்.

==========

No comments:

Post a Comment