1. பொண்ணு வீடு பெரிய வீரப் பரம்பரைன்னு கல்யாண புரோக்கர் சொன்னதை நம்பிப் போய் ஏமாந்துட்டேன்.
என்னாச்சு ?
பொண்ணுக்குப் பெரிய மீசை இருக்கு.
==========
2. அமைச்சர் முடிவெட்டப் போறப்போ எதுக்கு ஆறுபேரைக் கூட்டிகிட்டுப் போறார் ?
சலூன்ல போர்வை போத்தறப்போ கைதட்டத்தான்.
==========
3. கொஞ்ச நாளைக்கு நீங்க ஓட்டல்ல சாப்பிடக் கூடாது.
சரி டாக்டர், அப்ப உங்க நர்ஸைச் சமைச்சுப் போட அனுப்பறீங்களா.. .?
==========
4. நீதிபதியை கறுப்பு டிரஸ் போடாம வர வைக்க முடியுமா ?
எதுக்கு தலைவரே ?
இன்னைக்குக் கறுப்பு எனக்கு ராசியில்லாத நிறம்னு ராசிபலன்ல போட்டிருக்கு.
==========
5. உங்களை செக் பண்ணிட்டேன்.. . ஸ்லோ பாய்சனா இருக்குமோனு சந்தேகமா இருக்கு.
சந்தேகம் வேண்டாம். .. இருபத்தஞ்சு வருஷமா என் மனைவியோட சமையல்தான்.
==========
6. உங்க கணவருக்குக் குளிர் ஜுரம் .. அதனால நீங்க பக்கத்துல இருக்காதீங்க.
ஏன் டாக்டர் ?
நீங்க பக்கத்துல இல்லன்னா அவருக்குக் குளிர்விட்டுப் போயிடும்.
==========
7. தன்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்த ஒரு பெண்மணியிடம் டாக்டர் சொல்லிக் கொண்டிருந்தார். ஸாரி, மேடம் உங்களை என்னால் காப்பாத்த முடியாது. நோய் ரொம்பவே முத்திவிட்டதால ஆறு மாசம்தான் நீங்கள் உயிரோடவே இருக்க முடியும்.
கேட்க அதிர்ச்சியாகத் தான் இருந்தது என்றhலும் சற்று நேரத்திலேயே அந்தப் பெண்மணி சுதாரித்துக் கொண்டாள்.
குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய அடிப்படையான உதவிகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு மீதி காலத்தை மகிழ்ச்சியோடு கழிக்கத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்ன டாக்டர், இந்த ஆறு மாத காலத்தை எப்படிக் கழிப்பதாக உத்தேசம் ? என்று கேட்டார்.
என் மாமியாரோட இருக்கப் போறேன் டாக்டர் என்றாள் அந்தப் பெண்மணி.
என்னது.. . உங்க மாமியாரோடவா ? அவங்களுக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தம்னு ஏற்கெனவே சொல்லியிருந்தீங்களே ?
அதான் டாக்டர் விஷயமே, அவங்களோட இருந்தா இந்த ஆறு மாத காலமே எனக்கு அறுபது வருஷமா தோணும்.
==========
இன்றைய மெகா ஜோக் இது தாங்க:
8. பால்காரர் வீட்டுல பெண் எடுத்தது தப்பாப் போச்சு.
ஏன்.. . என்னாச்சு.. .?
அங்கே பாரேன்.. . முதலிரவுக்குப் பால் சொம்புக்குப் பதிலா, பால்கேன் எடுத்துக்கிட்டுப் போறதை.
==========
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment