Saturday, October 3, 2009

பிட்டு - 55

1. ஒரு மாசமா வர்றீங்களே. . ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் தெரியுதா.. .?

பரவாயில்லை டாக்டர் உங்க நர்ஸ் லதா இப்ப கொஞ்சம் முகம் கொடுத்துப் பேசறாங்க..

==========

2. தலைவரை ரிப்பன் வெட்டி கடை திறக்கச் சொன்னது வாஸ்தவம் தான். அதுக்காக இப்படி அரிவாளோட வருவார்னு யாருமே எதிர்பார்க்கலைங்க.

=========

3. நம்ம ஊருக்கே போலீஸ் ஸ்டேஷன் வரப்போகுதாம்.

அதை ஏன் சந்தோசமா சொல்றே ?

மாமுல் கொடுக்க இனிமே நாம அடுத்த ஊருக்குப் போய் அலைய வேண்டாமே

=========

4. டாக்டர்.. . வர.. வர.. காது சரியாகவே கேட்கமாட்டேங்குது.. .

நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க.. . ரெண்டே நாள்ல காய்ச்சல் சரியாயிடும்.

=========

5. டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.

இந்த டானிக்கை சாப்பிடுங்க.

சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?

நல்லா இருமலாம்.

=========

6. எனக்கு இது முதல் ஆபரேஷன் அதான் ரொம்பப் பயமா இருக்கு.

எனக்கும்தான் இது முதல் ஆபரேசன் நான் எங்கேயாச்சும் பயப்படறேனா ?

=========

7. தலைவர் கலந்துக்கற கூட்டத்துக்கு ஏன் ஒரு நாட்டியக்காரியை நிக்க வெச்சிருக்காங்க ?

மேடைக்கு வந்ததும் தலைவர் அலங்கார வளைவு இல்லையா-ன்னு கேட்பார். .. அதுக்குத்தான்.

==========


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:


8. குருவே. .. என் இரண்டு சம்சாரத்தையும் என்னால சமாளிக்க முடியலை. அதான் ஆசிரமத்துக்கு வந்துட்டேன்.

சிஷ்யா, 2 பொண்ணுங்களையே சமாளிக்க முடியாத நீ. ஆசிரமத்துல இருக்கிற அத்தனை பொண்ணுங்களை எப்படி சமாளிக்கப்போறே ?

==========

No comments:

Post a Comment