1. அவர்:எதுக்கு பெண் போலீஸ் எல்லாம் திடீர் போராட்டம் நடத்துறாங்க?
இவர்:அவங்க யூனிபார்ம்ல ஜன்னல் வைக்க அனுமதி கோரியாம்!
==========
2. ஒருவர்: உங்க பையனை நீங்க "தருதல" னு திட்டினாக்கூட அமைதியா சிரிச்சுக்கிட்டு போறான் நல்ல மரியாதை தெரிஞ்ச பையன் போல...
மற்றவர்: நீங்க வேற அவன் அஜித் ஃபேனாம் திட்டும் போதும் "தல" சொல்றேன்னு அவனுக்கு அதுல அல்ப சந்தோஷம்!
==========
3. வாங்கின கடனை போன மாதம் திருப்பிக் கேட்டப்ப அடுத்த மாதம் தர்றேன்னு சொன்னீங்க. இப்பவும் அடுத்த மாதம்னு சொல்றீங்களே.. .?
இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சுங்கிறது என்கிட்ட கிடையாதுங்க
==========
4. பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
இப்பவாவது உணர்ந்தியே!
கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
==========
5. என்னப்பா இது... தோசையை இப்படி ஸ்டாண்ட்ல தொங்க விட்டுத் தர்றீங்க...?
சும்மா அப்படியே பிய்ச்சுத் தின்னுடுங்க... இல்லேன்னா, தட்டு கழுவுற சார்ஜ; எக்ஸ்ட்ரா போடுவோம்
==========
6. உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார்.
ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.
==========
7. ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு
போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க!
==========
இன்றைய மெகா ஜோக்:
8. மேடம்... ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க...
எதுக்கு டாக்டர் ?
தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்... நீங்க பக்கத்துல இருக்கறதால இவரு வாயைத் திறக்க மாட்டேங்கறார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment