Thursday, July 9, 2009

பிட்டு - 36

1. ஏன் உங்க மூளையைப் படம் எடுத்துத் தரச் சொல்லி தொல்லைப்படுத்துறீங்க?

எனக்கு மூளை இல்லேன்னு சொல்றவங்க கிட்டெல்லாம் காட்டத்தான்
==========
2. நிம்மதியைத் தேடி ஊர் ஊரா யாத்திரை போறதுக்குப் பதிலா, இப்படிச் செய்தா என்ன ?

எப்படி ?

உங்க மனைவியை கொஞ்சநாள் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வையுங்களேன்.
=========
3. என் கணவர் இரவு பகல்னு பார்க்க மாட்டார். எப்பவும் கடினமாதான் உழைப்பார்.

அதான் இத்தனை குழந்தைகளைப் பார்த்தாலே தெரியுதே...
=========
4. அன்பரே, கைவிட்டு விட மாட்டீங்களே ?

கையை எப்படி விட முடியும் கண்ணே. கைக்கு பத்து பவுன் வளையல் அல்லவா போட்டிருக்கே.
==========
5. உங்க மனைவியைப் பற்றிப் பலபேர் பலவிதமா பேசறhங்களே, நீங்க கண்டிக்கக் கூடாதா ?

ஒருத்தர் ரெண்டு பேர்னா கண்டிக்கலாம். பல பேரை எப்படிக் கண்டிக்க முடியும்
==========

6. சிஸ்டர் எனக்காக ஒரு பாட்டு பாடுவீங்களா ?

ஓ.. .ஆனால் திட்டக் கூடாது

ம் .. . பாடுங்க

ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா.. .
==========
7. நடிகை - டைரக்டர்: சார்மார்வாடிகிட்டே என்னை ஏன் அழைச்சுட்டு வந்தீங்க ?

டைரக்டர் - அதான் சொன்னேனே.. . உங்களை வச்சுத்தான் இந்த படமே எடுக்கணும்னு
==========

இன்றைய மெகா ஜோக்:

8. பசங்களை அப்பா அம்மா விளையாட்டு விளையாடச் சொன்னது தப்பாப் போச்சு.

என்ன ஆச்சு ?

பயங்கரமாக அடிச்சு சண்டை போட்டுக் கொண்டு ரத்தக் காயத்துடன் வந்து நிற்கறாங்க.

No comments:

Post a Comment