Thursday, July 9, 2009

பிட்டு - 30

1. டாக்டர் என் கணவர் என்னை எதிர்த்துப் பேசறார் ?

இந்தப் பிரசினைக்கு ஏன் இங்கே வந்தீங்க ?

நான் வீட்ல இல்லாதப்ப தனியா அவர் பாட்டுக்கு எதிர்த்துப் பேசறார் டாக்டர்.
==========
2. இல்லத்தரசி : டாக்டர், என் மாமியாருக்கு நீங்க வைத்தியம் பண்றது இது மூணாவது தடவை.

டாக்டர்: அதுக்கு என்னங்க இப்போ?

இல்லத்தரசி: இந்த முறையும் அவங்க தேறிட்டாங்கன்னா, நான் டாக்டரை மாத்த வேண்டியிருக்கும்.
==========
3. தரகர்: மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன் .. .. ?

வீடு பார்க்க வந்தவர்: என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு
==========
4. தன் வீட்டருகே இருந்த பைனான்ஸ் கம்பெனி திடீரென்று மூடப்பட்டுவிட்டதாக தன் நண்பனிடம் வருத்தத்தோடு சொன்னார் சர்தார்ஜி.

"ஏன், நீ எதுவும் பணம் போட்டிருந்தியா?" என்று கேட்டார் நண்பர்.

"பத்தாயிரம் ரூபாயை இன்னிக்கு அங்கே டெபாசிட் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன் படுபாவி அதுக்குள்ளே ஒடிட்டானே" முன்பை விட வருத்தமாய் சொன்னார் சர்தார்ஜி
==========
5. சர்தார்ஜி ஒருவர் வேலை விஷயமாக ஒரு கம்பெனிக்குச் சென்றார். அங்கே, அவசரமாக பத்து ஒயிட் பேப்பர்கள் தேவைப்பட்டது அவருக்கு ஆனால், அவரிடமிருந்ததோ

ஒரே ஒரு பேப்பர் மட்டும். பக்கத்தில் இருந்த கடைகளில் பேப்பர் கிடைக்காததால் ஒரு ஐடியாவுடன் ஜெராக்ஸ் கடை ஒன்றிற்குள் நுழைந்து கையிலிருந்த ஒயிட் பேப்பரைக்

குடுத்து அவசரமா, பத்து காப்பி போட்டுக்குடுங்க என்றவர் சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்தவராய் பேக் அண்ட் ஃப்ரெண்ட் ரெண்டு சைடும் காப்பி போட்டுடுங்க - என்றார்.
==========
6. சர்தார்ஜிகள் முட்டாள்களாக ஜோக்குகளில் சித்திக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பவர் சுக்பீர்சிங் இந்த உலகில் சர்தார்ஜிகள் மட்டும் தான் முட்டாள்களா ? எல்லோரும்

ஒரு வகையில் முட்டாள்கள்தான். இதை நிரூபித்துக் காட்டுவேன் என்று தன் நண்பர்களிடம் ஒரு நாள் சவால் விட்ட சுக்பீர் சிங், குதுப்மினாருக்கு போனார்.

குதுப்மினாரின் உச்சியில் நின்று கொண்டு கீழே எதையோ சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தார் "கீழே அப்படி என்ன சுவாரஸ்யமாக இருக்கிறது?" என்று அவர் காதருகில்

ஓரு குரல் கேட்டது. "பேசாமல் என் பின்னால் கியூவில் நில், நான் கொஞ்ச நேரம் பார்த்த பிறகு உனக்கு விஷயத்தை சொல்கிறேன்" என்றார் சுக்பீர் சிங்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆன பின் சர்தார்ஜியின் பின்னால் நின்றவருக்கு கோபம் வந்தது. என்னய்யா இது நீ பார்த்து ரசிக்க குதுப்மினாரின் உச்சியில் இருந்து தரை

வரை நீண்ட கியூ நிற்கிறது. நீ என்ன பார்க்கிறாய் என்பதை இப்போதாவது சொல்லமாட்டாயா ? என்று சிங்கின் காதருகே சென்று கத்தினார்.

இதைக் கேட்டதும் சுக்பீர் சிங்குக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஒரு சர்தார்ஜியை நம்பி எத்தனை முட்டாள்கள் ஒன்றுமில்லாததைப் பார்க்க கியூவில் நிற்கிறhர்கள்

என்று நினைத்தவாறு திரும்பிப் பார்த்த சுக்பீர்கிங்கின் முகம் குறுகியது. குதுப்பினாரின் உச்சி முதல் தரை வரை கியூவில் நின்றிருந்தவர்கள் எல்லோருமே சர்தாஜிகள்
==========
7. டாக்டர் எனக்கு வாய் கூசாத மாதிரி மாத்திரை குடுங்க

ஏன் ? அடிக்கடி மாங்கா சாப்பிடுவீர்களா ?

நான் ஒரு வக்கீல் டாக்டர். கோர்ட்ல வாய் கூசமா நிறைய பொய் சொல்ல வேண்டி இருக்கு.
==========

இன்றைய மெகா ஜோக்:

8. என்னடி நீ, பஸ்ஸில் உன் பின்னால் நின்னவன் உன் ஜாக்கெட்டுக்குள்ள கையை விடறான் .. .. நீ பேசாம இருக்கியே ?

நான் மணிபர்சை ஜாக்கெட்டுக்குள்ள வைக்கலையே .. .. கையை விட்டு அவன் ஏமாறட்டுமேன்னுதான் சும்மா இருந்தேன்

No comments:

Post a Comment