Friday, July 3, 2009

பிட்டு - 9

1. நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்
அப்புறம் ?
களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்...
==========
2. என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?
நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்
==========
3. தலைவருக்கு, எதுஎதுக்குத்தான் ஜோசியம் பார்க்குறதுன்னு விவஸ்தை இல்லாமப் போச்சு...
என்னாச்சு ?
வருகிற தேர்தலில் தனக்கு எத்தனை கள்ள ஒட்டு விழும்ன்னு கேட்குறாரே
==========
4. டாக்டர்... ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால என் பொண்ணுக்கு ஏன் மயக்கமருந்து கொடுக்கலை ?
உங்க பொண்ணை நான் மயக்கிட்டதா யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க
==========
5. டாக்டர்... உங்களைக் கைராசி இல்லாதவர்னு வெளில பேசிக்கிறாங்களே... உண்மையா...?
ஏன் கேட்கறீங்க ?
என் மாமியாரை உங்ககிட்டே அட்மிட் பண்ணலாம்னு இருக்கேன்
==========
6. ஐய்யா சாப்பாட்டைக் கண்ணால பார்த்து நாலு நாள் ஆச்சுங்க.. .
ஒரு அஞ்சு நிமிஷம் இரு... இப்ப நான் சாப்பிடப் போறேன்... பார்த்துட்டுப் போய்டு
==========
7. அவருக்கு மறதி அதிகமாயிடுச்சுனு எப்படிச் சொல்றே ?
கதவில் சாவியை மாட்டிட்டு பூட்டை எடுத்துட்டுப் போறாரே!
==========

இன்றைய மெகா ஜோக்:

8. திருடன்: மரியாதையா பீரோ சாவியைக் கொடு...
இல்லத்தரசன்: இதையேதாம்ப்பா நான் கல்யாணம் ஆனதுலேர்ந்து என் வீட்டுக்காரிகிட்டே கேட்டுக்கிட்டிருக்கேன்...
==========

1 comment:

  1. பிட்டு ஜோக் போடாம ஏமாத்திட்டீங்களே கோகுல்... இருந்தாலும் மெகா ஜோக் அருமை...

    ReplyDelete