1. அவர் திடீர்னு கோர்ட்ல குட்டிக்கரணம் போடுறாரே.. . ஏன் ?
அதான் சொன்னேனே.. . அந்த சாட்சி பல்டி அடிப்பாருன்னு.. .
==========
2. தலைவர் வாழ்ந்த வீட்டை நினைவுச் சின்னம் ஆக்கறேன்னு சொல்லிட்டு ஏன் கை விட்டுட்டாங்க?
அவரு ஏகப்பட்ட வீட்டுல வாழ்ந்ததால, அரசாங்கத்தால முடியாதாம்.
==========
3. நம்ம தலைவருக்கு ரொம்பத்தான் குசும்பு.கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய முடியலையாம்.... கோர்ட்லயே ஒரு ரூம் வாடகைக்குக் கேக்கிறார்.
==========
4. எதை வெச்சிப் படம் எடுத்தா நல்லா ஓடும் ?
முயலை வெச்சிப் படம் எடுங்க சார், நல்லா துள்ளித் துள்ளி ஓடும்
==========
5. ஏண்டீ என் கல்யாண பட்டு வேட்டி பத்திரமா இருக்கா .. .
பாத்திரமா இருக்கு .. ..
==========
6. டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்
==========
7. நம்ம தலைவரை நெடுஞ்சாலைத் துறையிலிருந்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கினது தப்பாப்போச்சு .. ..
ஏன்யா .. .. ?
ஏர்போர்ட் ரன்வேயில விமானங்களெல்லாம் ரொம்ப வேகமா வருது. அதனால, ஏகப்பட்ட ஸ்பீட் பிரேக்கர் போடணும்னு அடம் பிடிக்கிறாரு.
==========
இன்றைய மெகா ஜோக்:
8. மாமியார் முகத்துல அயர்ன் பாக்ஸை வச்சு தேச்சியா .. .. ஏன் ?
முகத்துல சுருக்கம் விழுதுன்னு கவலைப்பட்டாங்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment