Thursday, July 9, 2009

பிட்டு - 23

1. போலீஸ் : எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்க மாட்டோம்.

ராமு: என்ன சார், அநியாயமா இருக்கு. அப்ப என் தலையில முடி வளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?
==========
2.வாணி : என்னங்க இது? கலர் போட்டோன்னு எடுத்தீங்க! புடவையெல்லாம் கலர் சரியா விழலையே.

போட்டோகிராபர்: பிலிமைக் கழுவும்போது சாயம் போயிட்டுதும்மா!
==========
3. நோயாளியின் உறவினர்: டாக்டர், ஆபரேஷன் எவ்வளவு நேரம் நடக்கும்?"

டாக்டர் : ஐந்து நிமிஷத்துலயும் முடியலாம், ஐந்து மணி நேரமும் ஆகலாம். எதுவும், நோயாளியோட உயிர் போறதை வைச்சுத்தான் சொல்ல முடியும்!
==========
4. சோமு: சார், அந்த ஜோசியக்காரனை நம்பாதீங்க!

ராமு: ஏன், என்னாச்சு?

சோமு: அவங்கிட்ட 15 நாளுக்கு முன்னாடி ஜோசியம் பாத்தேன், சீக்கிரம் நீங்க ரெண்டு சக்கர வாகனம் வாங்குவீங்கன்னு சொன்னான்.

ராமு: நல்லது தானே, சந்தோஷப் படுங்க, அதுக்கு என்ன இப்போ?

சோமு: ஆக்ஸிடெண்ட்ல கால்ல அடிபட்டு சக்கர நாற்காலி வாங்க வேண்டியதாகப் போச்சு சார்!
==========
5. கணவன்: `தொப்பு'ன்னு சத்தம் கேட்டுதே... கொல்லை கிணற்றில் குதித்தது யார்னு போய்ப் பார்த்துவிட்டு வா!

மனைவி: முடியாது! குதிச்சது உங்கம்மா இல்லைன்னு தெரிஞ்சா, அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கவே முடியாது!
==========
6. இல்லத்தரசி: நீ இப்படி மெதுவாக வேலை செய்து கொண்டிருந்தால் நான் வேறு ஒரு வேலைக்காரியை பார்த்துக் கொள்ள வேண்டியது தான்!

வேலைக்காரி: சீக்கிரம் பாருங்கள் அம்மா, எனக்கும் ஒருத்தியாக வேலை செய்வது பிடிக்கவில்லை!
==========
7. சோமு: என் பொண்ணை, பொண்ணு பார்க்க வந்தவங்க, "என்னெல்லாம் போடுவீங்க"ன்னு கேட்கறாங்க.

ராமு: நியாயம்தானே.

சோமு: யோவ், அவங்க கேட்கிறது, பொண்ணு பார்க்க வரும்போது என்ன டிபன் போடுவீங்கன்னுய்யா.
==========

இன்றைய மெகா ஜோக்:

8. சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?

கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?

கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.

கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும்.

அப்போ கல்யாணத்துக்குப் பின்னாடி?

அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை.

No comments:

Post a Comment