Thursday, July 9, 2009

பிட்டு - 16

1. போலீஸ் ஸ்டேஷனை வாஸ்து சாஸ்திரப்படி இடிச்சுக் கட்டுறாங்களாமே .. .. ஏன் .. ?

வாரத்துக்கு ஒரு லாக்கப் சாவு நடக்குதாம்
==========
2. கெமிஸ்டரி டெஸ்டல .. .. நாலு பரிசோதனை செய்யச் சொன்னாங்க .. ..

நீ என்ன சோதனை செஞ்சே ?

எனக்கு எதுவும் தெரியலை அதனால சோதனைமேல் சோதனை போதுமடா சாமின்னு எழுதினேன் .. . ..
==========
3. 'பசித்தவனுக்குத் தினம் ஒரு மீன் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் நல்லது'ங்கற உண்மையை இன்ஸ்பெக்டர்கிட்ட விளக்கிட்டேன்.''

''எப்படி?''

''வாரா வாரம் என்கிட்ட மாமூலுக்குக் கைநீட்டறதுக்குப் பதிலா எப்படி பிக்பாக்கெட் அடிக்கிறதுன்னு கத்துக் கொடுத்துட்டேன்."
==========
4. ''உங்க வீட்டு நாய் தினமும் எங்க நியூஸ் பேப்பரைத் தூக்கிட்டுப் போயிடுது!''

''ஓசியில பேப்பர் படிக்கிறார்னு எம் புருஷனை இப்படி மரியாதைக் குறைவா பேசுறது நல்லாயில்ல!''
===========
5. ''உங்க டைவர்ஸுக்கு என்ன காரணம்னு கேட்டதுக்கு உங்க கணவர், நீங்க அவரை மதிக்கிறதே இல்லைன்னு சொல்றாரே...?''

''சுத்த பொய். அவன்தான் என்னை மதிக்கிறதில்லை...!''
==========
6. ''புதுமுகத்தைப் போட்டதால ஜெயிலுக்கு வந்துட்டீங்களா, ஏன்?''

''ரூபாய் நோட்டுல காந்திக்குப் பதிலா வேற ஒருத்தரைப் போட்டு அச்சடிச்சேன், அதான்!''
==========
7. ''கொலை நடந்தப்போ பார்த்துக்கிட்டு சும்மா நின்னிருக்கீங்களே... ஏன்?''

''நடந்த கொலைக்குச் சாட்சி வேணாமா யுவர் ஆனர்?'
==========

அப்புறம் இன்றைய மெகா ஜோக்:

8. ஒரு கஞ்சன் தனது மனைவியின் பிறந்த நாளன்று பிஸினஸ் விஷயமாக வெளியூர்ப் போயிருந்தான். எனக்கு பிறந்தநாள் பரிசு வாங்கப் பணம் தேவை. எனவே உடனடியாக செக் அனுப்புங்கள் என்று போனில் அவனிடம் சொன்னாள் மனைவி. கணவன்தான் மகாக் கஞ்சனாச்சே ஒரு செக் எழுதி. அதில் ஆயிரம் ரூபாய் என்பதற்குப் பதில் ஆயிரம் முத்தங்கள் என்று எழுதியனுப்பினான்.

இரண்டு நாள் கழித்து மனைவிக்கு போன் செய்து. செக் கிடைத்ததா ? என்ற கேட்டான்.

"ம்.....கிடைத்தது.. . ஆனால், பாங்க் காஷியர்தான் பாவம்.. . அதை எனக்கு கொடுப்பதற்குள் ரொம்பவே தினறிப்போனார் * என்று சொன்னாள் மனைவி.

No comments:

Post a Comment