1. என் அம்மாவை ஏன் ஊருக்கு அனுப்பிட்டே ?
என்னை கொழுப்பையே கிட்ட சேர்க்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு
==========
2. பார்த்தியாடி... நம்ம பையனுக்கு அப்படியே என் மூளை.. .
தெரியும்.
எப்படி ?
என் மூளைதான் என்கிட்டேயே இருக்கே
===========
3. ஆம்பளைங்களைவிட பொம்பளைங்களுக்கு ஆயுள் அதிகமா இருக்கே... என்ன காரணம் ?
அவங்களுக்கு தான் பொண்டாட்டிங்கிற ஒரு தொந்தரவே கிடையாதே
=========
4. உங்க மகனை பி.ஏ. வரைக்கும் படிக்க வெச்சுட்டு வேலைக்கு அனுப்பாம ஜால்ரா போட கத்துக்கொடுக்கறீங்களே..?
பின்னாலே நல்ல வேலை ஏதாவது கிடைச்சா அவனுக்கு பிரயோஜனமா இருக்குமேன்னு தான்.. .
==========
5. ஏன் உங்க மனைவி வரும்போது, நீங்க கண்ணாடி போட்டுக்கறீங்க...?
டாக்டர்தான் தலைவலி வந்தா, என்னைக் கண்ணாடி போட்டுக்கச் சொன்னாரு...
==========
6. கல்யாணப் பேச்சு பேச ராத்திரியிலே ஏன் வீட்டுக்கு வரவேண்டாங்கறீங்க ?
டி.வி. பார்த்திட்ருக்கற வீட்டுப் பொம்பளைங்க கண்ணீரும் கம்பலையுமா இருப்பாங்க... அதான்
=========
7. ஏம்ப்பா இப்படி பிக்பாக்கெட் தொழில் பண்ணறே ? ஏதாவது ஒரு லட்சியத்தை வெச்சுக்கிட்டு உழைக்க வேண்டியதுதானே ?
என்னங்கையா இப்படிக் கேட்கறீங்க ? ஒரு நாளைக்குக் குறைஞ்சது அஞ்சு பர்சையாவது அடிக்கணும்ங்கறதுதானே என்னோட லட்சியமே
=========
அப்புறம் இன்றைய மெகா பிட்டு ஜோக்கு
8. அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ?
மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment