1. உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?
பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சி
==========
2. ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க ?
பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.
==========
3. மேடையில மைக் டெஸ்ட் பண்ணியது தப்பாப் போச்சி.
ஏன் ?
ஒன் டூ த்ரீன்னு சொன்னதும் எல்லோரும் ஓடிட்டாங்க
==========
4. சர்தார்ஜியும் அவரது நண்பரும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள். உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற ஒரு ஆள் அங்கிருந்த குதிக்கப் பார்ப்பதாக ஒரு காட்சி, பரபரப்பான இந்தக் கட்டத்தில் இடைவேளை விடப்பட வெளியே வந்த நண்பர்கள் இந்த காட்சி பற்றியே விவாதித்தார்கள்.
பேச்சுவாக்கில் அந்த ஆள் கீழே குதிக்கப் போகிறான் கால் எலும்பு முறியப் போகுது என்று பந்தயமே கட்டினார் நண்பர். சர்தார்ஜியும் விடவில்லை பந்தயத்துக்கு நானும் தயார். அவன் கண்டிப்பாக கீழே குதிக்கமாட்டான் என்றார் நம்பிக்கையோடு பந்தயத்தில் தோற்பவர், வெல்பவருக்கு விருந்து தரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு இருவரும் தியேட்டருக்குள் போனார்கள்.
சர்தார்ஜிதான் பாவம் அந்த ஆள் உச்சியிலிருந்து கீழே குதித்துவிட்டான்.
பந்தயத்தின்படி, வென்ற நண்பருக்கு விருந்து வைத்தார் சர்தார்ஜி. அப்போது நண்பர், "உங்களை நான் எமாத்திட்டதா என்னோட மனச்சாட்சி உறுத்துது. அந்த ஆள் கீழே குதிக்கப்போறது எனக்கு முன்னாடியே தெரியும். படத்தை நான் எற்கெனவே பார்த்துட்டேன் என்றார்.
"நானும்தான் படத்தைப் பார்த்திருந்தேன். ஆனால் அந்த முட்டாள் மறுபடியும் இப்படிக் கீழே குதிப்பான்னு துளிகூட நான் எதிர்பார்க்கலை" என்றார் சர்தார்ஜி வருத்தத்தோடு
==========
5. டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை.
வெரிகுட் நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க
==========
6. உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?
ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்
==========
7. மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே
==========
இன்றைய மெகா ஜோக்:
8. என்ன சார்.. .. வண்டியில காஸ் பொருத்தினப்புறம் ஆபீஸ் போறது கஷ்டமா இருக்காதே
நீங்க வேற ... இப்ப ராத்திரி சமையலையும் கார்லேயே பண்ணி முடிச்சுடுங்கனு சொல்லிட்டா என் பொண்டாட்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment