1. ஒரு ஜோடி தியேட்டரில் படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போதே கரண்டு போயி திரும்பி வந்தது.
"கரண்டு வர இவ்வளவு நேரமாகும்னு தெரிஞ்சிருந்தா உனக்கு ஒரு முத்தம் கொடுத்திருப்பேனே!" அப்படின்னான் காதலன்.
"அப்படின்னா, கொஞ்ச நேரத்துக்கு முந்தி முத்தம் கொடுத்தது நீங்க இல்லியா" -ன்னு பதறினாள் அவள்.
==========
2. "அம்மி மிதிச்சி அருந்ததி பார்க்கிறது அப்படின்னா என்னன்னு தெரியுமா ?" -ன்னு வாத்தியார் பையன் கிட்டே கேட்டார்.
"தெரியும் சார் எங்க வீட்டுலே ஜன்னலுக்குக் கீழே கிடக்கிற அம்மியை மிதிச்சுத்தான் எங்க அண்ணன் எதிர்த்த வீட்டு அருந்ததிங்கிற பெண்ணைப் பார்த்து கிட்டு இருக்கிறான்" இப்புடி மாணவன் பதில் சொறான். இப்போ காதல் அந்த ரேஞ்சிலே போகுது.
==========
3. ஒருநாள் ஒரு பொண்ணு தன் காதலன் கிட்டே, "அத்தான் உங்க அன்புச் சின்னம் என் வயித்துலே விளையாடுது" ன்னு சொன்னா. உடனே அவன் பதறிப் போய், "நாம காதலிக்க ஆரம்பிச்சு ஒரு வாரம் தானே ஆச்சு அப்படின்னான்"
"பயப்படாதீங்க. முந்தா நாள் நீங்க வாங்கித் தந்த பாதுஷா இன்னமும் ஜீரணம் ஆகலை. அதைச் சொன்னேன்" அப்படினாள்.
==========
4. ஒருத்தன் தன் நண்பன் கிட்டே, "ஏண்டா மூஞ்சியெல்லாம் காயமா இருக்கு?" ன்னு கேட்டான்.
"எதிர்த்த வீட்டுப் பெண்ணை சைட் அடிச்சேன். பூவை வீசினா" -ன்னான்.
"பூவை வீசினா எப்படிடா காயம் படும்"-ன்னான். "அவ வீசும் போது பூ, தொட்டியிலே இருந்தது" அப்படின்னான் இவன்.
==========
5. இதை மாதிரி இன்னொரு டயலாக்கை கேளுங்க... ஒருத்தன் சொல்றான்.
"அன்பே எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நீதான் எனக்குக் காதலி. நான் தான் உனக்குக் காதலன். இதுலே மாற்றமே கிடையாது.
அதுக்கு அவ, "நாசமாப் போச்சு. அப்போ நாம கணவன் - மனைவியா ஆகப்போறதே இல்லியா"-ன்னு கவலையோட கேட்டாள்.
==========
6. "டாக்டரைக் காதலிச்சியே என்னாச்சுடி?" அப்படின்னு ஒருத்தி தன் தோழிகிட்டே கேட்டாள்.
அதுக்கு அவ "டாக்டர் கொடுக்கிற லவ் லெட்டர்லே எழுத்து புரியலைன்னு கம்பவுண்டர்கிட்டே கொடுத்து படிக்கச் சொன்னேன். இப்போ நாங்க இரண்டு பேருமே காதலிக்க ஆரம்பிச்சிட்டோம்" -னா.
==========
7. டைரக்டர் : நீங்க நடிக்குற படம் நல்லா ஓடனும்னா ரெண்டே ரெண்டு வழி தான் இருக்கு ......
ஒன்னு உடலை குறைக்கணும் .......
நடிகை: இன்னொன்னு ????....
டைரக்டர் :உடைய குறைக்கணும் !!!!!!!
==========
இன்றைய மெகா ஜோக்:
8. இந்திய கிரிக்கெட் அணியில் மிஸ்டர் மொக்கையையும் தேர்வு செய்திருந்தார்கள்.. ஆஸ்திரேலியாவுடனான போட்டியில், மொக்கையும், சச்சினும் துவக்க ஆட்டக்காரர்கள்..முதலில் மொக்கை, பிரெட் லீயின் புயல் வேக பந்துவீச்சை எதிர்கொண்டார்..
முதல் பந்து .. விர்ர்ர்ர்ர்ர்ரூம்... 145 கிமீ வேகம்.. மொக்கை பார்க்குமுன்னே அவரைக் கடந்து போனது..
2 வது பந்து... விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூம்... 147 கிமீ வேகம்.. அதே கதை..
3 வது பந்து.. 150 கிமீ வேகம்.. வி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. இதுவும் வந்ததும் போனதும் மொக்கைக்கு தெரியவே இல்லை..
4 வது பந்து ஓவர் ஸ்டெப்பிங்.. நடுவர் "நோ பால்" என்று அறிவித்ததைக் கண்ட மொக்கை நேரே சச்சினிடம் சென்றார்.. போகும்போது, தேர்ந்த பேட்ஸ்மேனைப் போல பிட்சை தன் மட்டையால் தட்டிக்கொண்டே சென்றார்.. சச்சின் என்னவென்று கேட்க.. மொக்கை சொல்லலானார்..
இப்போதான் அம்பயருக்குத் தெரிஞ்சிருக்கு.. இவன்கிட்ட பந்து இல்லேன்னு.. ஆனா அப்போலேருந்தே அந்த ஆளு.. சும்மா ஓடி வரான்.. பந்து போடுவதுபோல நடிக்கிறான்.. ஆனா பந்தும் வரலே..ஒண்ணும் வரலே..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment