1. போன படத்தைவிட இது லோ பட்ஜெட் படம்னு சொன்னதும் ஹீரோயின் பயப்படறாங்க சார்.
ஏன் ?
அவங்களுக்கு டிரெஸ் இருக்குமான்னு சந்தேகப்படறாங்க!
==========
2. பால் எல்லாத்தையும் பூனை குடிக்கிற வரைக்கும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?
இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு பார்த்துக்கிட்டு இருந்துட்டேன்.
==========
3. மனைவிக்கு ஆபரேஷன் நடந்தப்போ அழுதுட்டிருந்தாரேன்னு ஆபரேஷன் சக்ஸஸ்ன்னு போய்ச் சொன்னேன்.
சந்தோஷமாயிட்டாரா ?
ஊஹும், இன்னும் அதிகமா அழ ஆரம்பிச்சுட்டார்.
==========
4. சீரியஸ் ஆபரேஷன்ல செத்துப் பிழைச்சிருக்கே... ஆபரேஷன் பண்ணின டாக்டரே இன்று போல் என்றும் வாழ்க-ன்னு வாழ்த்தினதும் எப்படியிருந்தது உனக்கு.. ?
எமனே நேரில் வந்து ஆசீர்வாதம் பண்ணின மாதிரி இருந்தது நர்ஸ்!
==========
5. எதுக்கு டாக்டர் மூச்சை இழுத்துவிட சொல்றீங்க ?
ஆபரேஷனுக்குப் பிறகு மூச்சுவிட முடியாது. அதான் இப்பவே ஆசைதீர இழுத்து விட்டுக்கங்க!
==========
6. கண்டக்டர் ஏன் விசிலுக்கு பதிலா சங்கை ஊதறார் ?
டிரைவர் புதுசாம். டிரைவிங் அரைகுறையாத்தான் தெரியுமாம்!
==========
7. ஏன்யா... எனக்கு மேடையில நாற்காலி போடலே.. ?
நீங்கதானே தலைவரே எனக்கு நாற்காலி ஆசை இல்லைன்னீங்க.. .!
இன்றைய மெகா ஜோக்:
8. உடம்பெல்லாம் கன்னாபின்னானு வேர்க்குது டாக்டர்.
கவலைப்படாதீங்க... செக் பண்ணிடலாம்...
நான் ட்ரீட்மெண்ட்டுக்கு வரலை டாக்டர்... உங்க ஏ.ஸி. ரூம்ல கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகலாம்னு வந்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment