Thursday, July 9, 2009

பிட்டு - 18

1. பத்து மணிக்கு டாண்னு ஆபீஸ் போகலாம்னு பார்த்தா முடியலை

ஏன் .. . நடுவில் ஏதாவது பிரச்சினையா ?

இன்னும் வேலையே கிடைக்கலையே
==========
2. எலிப்பொறி செய்ய என்னை ஏன் கூப்பிடுறீங்க ?

நீங்க பொறியல் வல்லுனர்னு சொன்னாங்களே
==========
3. டிஸ்பென்சரி வாசல்ல கடை வெச்சதுக்குப் போய் அந்த டாக்டர் ஏன் இப்படி சத்தம் போடறாரு ?

பின்ன டிஸ்பென்சரி வாசல்ல ரோஜா மாலை, மலர் வளையமெல்லாம் வித்தா டாக்டர் சும்மா இருப்பாரா ?
==========
4. போன ஜென்மத்துல எனக்கு நீ மருமகளா வந்திருப்பேன்னு நினைக்கிறேன்..

எப்படிச் சொல்றீங்க.. .?

உன்னைப் பார்த்தாலே சண்டை போடணும் போலத் தோணுதே.. .
==========
5. நான் குடிகாரனா நடிச்சதை என் ரசிகர்கள் ஏத்துக்கலைன்னு நினைக்கிறேன்.

ஏன் சொல்றீங்க ?

படம் ஊத்திக்கிச்சு.
==========
6. அந்த நடிகைகிட்டே எக்ஸ்-ரே படம் எடுக்கணும்னு சொன்னீங்களா டாக்டர்?

ஆமாம் .. .. ஏன் கேட்கறீங்க ?

முழு டிரஸ்ஸோட எடுத்தா ஒரு ரேட் கவர்ச்சி டிரஸ்ல எடுத்தா ஒரு ரேட்னு சொல்றாங்க
==========
7. என்ன .. .. அந்த டாக்டர் எம்.பி.பி.எஸ்-னு மட்டும் போட்டுக்கிட்டு இருக்காரு .. ..

பேரே போடலையே .. .. ?

நான்தான் சொன்னேனே .. .. அவர் பேர் போன டாக்டர்னு .. ..
==========

இன்றைய மெகா ஜோக்:

8. ஷூட்டிங்கல ஏன் கேமராமேன் குஷியாயிட்டாரு ?

அது ஒண்ணுமில்ல.. . ஜன்னல் ஜாக்கெட்டை கதாநாயகி மாத்திப் போட்டுட்டாங்களாம்.. . அதான்

No comments:

Post a Comment