Sunday, July 12, 2009

பிட்டு - 37

1. டாக்டர்... அடிபட்ட கோபத்துல என் மாமியாரை நாய் கடிச்சுடுச்சு...

முதலுதவி ஏதாவது பண்ணிங்களா...?

இல்லை டாக்டர்... நாய் எங்கயோ ஓடிடுச்சு
==========
2. பிரிஸ்கிரிப்ஷனை டாக்டர் ஏன் ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதித் தர்றார்?

அப்பதானே பத்திரமா வெச்சுக்குவோம்
==========
3. பெப்சோடென்ட்டை தலையில் தேய்த்தால் என்ன ஆகும் ?

என்னாகும் ?

ஈறுகள் வலுவடையும்
==========
4. பால் கெட்டுப் போகாம இருக்க என்ன செய்யணும் ?

என்ன செய்யணும் ?

குடிச்சுடணும்
==========
5. ஆபரேஷன் பண்றவரைக்கும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் குடிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார் *

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்றாரா...?
==========
6. தலைவர், மேடைல பேசும்போது கூடவே ஒரு அதிகாரி வர்றாரே!

சென்சார் அதிகாரியாம். அவர் எதிர்க்கட்சியினரைத் தாக்கி கெட்ட வார்த்தை பேசும்போது கட் பண்ணிடுவாராம் மைக்கை.
==========
7. அந்த நோயாளி உங்களைப் பார்த்து ரொம்பப் பயப்படுகிறார், டாக்டர்.

இப்போ அப்படித்தான் பயப்படுவாங்க. அப்புறம் ஆவியா வந்து பயமுறுத்துவாங்க.
==========

அப்புறம் இன்றைய பிட்டு ஜோக்கு:

8. இந்த ஆண்டும் எல்லா நாட்டு மல்லர்களின் மல்யுத்தப் போட்டியை நமது அரண்மனையிலேயே நடத்த ஏற்பாடு செய்யவா, அரசே!?

வேண்டாமய்யா, வேண்டவே வேண்டாம், போன ஆண்டு நடத்தியபோதே மூன்று ராணிகளை அந்தப்புரத்திலிருந்து காணோம்!

No comments:

Post a Comment