Friday, October 16, 2009

பிட்டு - 80

1. உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?

பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சு.

==========

2. ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க .. .. ?

பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.

==========

3. உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?

அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு.

==========

4. ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம் வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?

புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா இருக்காம்.

==========

5. டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை.

வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க.

==========

6. உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?

ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்.

==========

7. மூணு யானை கர்ப்பமா இருக்குது, அதுல ஒண்ணுக்கு பன்னிரண்டு மாசம். இன்னொண்ணுக்கு பதினாறு மாசம். கடைசி யானை இருபது மாசம். இதுல எந்த யானை முதல - குட்டி போடும்.

கடைசி யானைதான்

தப்பு. எதுவுமே முதலைக் குட்டி போடாது. எல்லாமே யானைக் குட்டிதான் போடும்.

==========


இன்றைய பிட்டு ஜோக்:8. மாப்பிள்ளை இவ்வளவு ஸ்பீடா இருப்பார்னு எதிர்பார்க்;கவே இல்லை.

ஏன் .. .. ?

முதலிரவு முடிஞ்சதும் உடனே நைட் 12-30 மணிக்கு மாமியார் வீட்டுக்கு பிரசவத்தக்கு பஸ் ஏத்தி விட்டுட்டாரே

Saturday, October 3, 2009

பிட்டு - 79

1. யோவ், யாருய்யா ஆபரேஷன் தியேட்டர் வாசல்லே சூஸைட் பாயிண்ட்-னு எழுதி வெச்சது ?

==========

2. டாக்டர், மாடி மேல கிளினிக் வெச்சிருக்கீங்களோ ?

அதனாலே என்ன ?

மேலே போகும் வழி-னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே... பேஷண்ட்ஸ் எப்படி வருவாங்க ?

==========

3. ஐயா இல்லீங்களா...? தீபாவளி இனாம் வேணும்!

ஐயாவும் தீபாவளி இனாம் வாங்கத்தான் அடுத்த தெருவுக்குப் போயிருக்காரு.

==========

4. உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. . என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவன் கேட்டான் - அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.

எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?- லேசான நகைப்போடு இவன் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -

அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்.

==========

5. அந்த ஓட்டல் பொங்கல் மணக்க, மணக்க இருக்கும்.

மண்ணாங்கட்டி.. . நீ சொன்னியேனு போய் சாப்பிட்டேன். கைநிறைய இஞ்சி, கறிவேப்பிலை, மிளகுக்கு நடுவே கொஞ்சூண்டு பொங்கலும் இருந்துச்சு.

==========

6. என் காதுல நீங்க போட்ட புதுத் தோடு எங்கேயோ விழுந்திடிச்சுன்னு சொன்னா, அதுக்குச் சந்தோஷப்படறீங்களே. .. ஏன் ?

நான் உன் காதுல போட்டதுல ஏதோ இந்த ஒண்ணாவது விழுந்திருக்கேனுதான்.

==========

7. ஒரு நோயாளி தன் மனைவியுடன், ஆஸ்பத்திரியில்: ”டாக்டர் தெரியாம ஸ்பூனை முழுங்கிட்டேன். கஷ்டமா இருக்கு.. .”

மனைவி: “ஆமாம் டாக்டர். .. ஸ்பூன் இல்லாம ஊறுகாய் எடுக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. .

இன்றைய மெகா ஜோக்:

8. எல்லா மெகா சீரியல்-களிலேயும் பழைய நடிக, நடிகைகளையே போடறாங்களே. .. ஏன் ?

அவங்கதான் இப்ப மெகா சைஸ்ல இருக்காங்க

பிட்டு - 78

1. தலைவர் பாக்கெட்ல பேனா வைக்கறதுக்குப் பதிலா எதக்கு ஸ்டாம்ப் பேட் வெச்சிருக்கார் ?

கை நாட்டு வைக்கதான்.

==========

2. ஒரு மாவட்ட கலெக்டருக்கு வேறு ஊருக்குப் போகச் சொல்லி டிரான்ஸ்ஃபேர் ஆர்டர் வந்தது. கலெக்டரின் ஊழியர்கள் அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தினார்கள். விழா முடிந்த

பிறகு ஒருவர் மட்டும் ஒரமாக உட்கார்த்து அழுது கொண்டிருந்தார்.

அவரிடம் போன கலெக்டர் அவரைப் பார்த்துக் கண்கலங்கி கவலைப்படாதே நீ என்மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பாய் என்று தெரியாது அடுத்து வரப்போகம் கலெக்டர் என்னைவிட

நல்லவராக இருப்பார் என்று ஆறுதல் சொன்னார்.

அதற்கு அழுதுகொண்டிருந்த அந்த நபர் சும்மா எனக்காகப் பொய் சொல்லாதீங்க சார் இதை நான் நம்பமாட்டேன் என்னா உங்களுக்கு முன்னாடி இருந்த கலெக்டரும் இதையேதான்

சொன்னாரு என்றார்.

==========

3. தொகுதி மக்கள் இப்படிக் கேப்பாங்கன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கலை

என்ன கேட்டாங்க ?

இத்தினி வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்து உங்க குடும்பத்துக்கே ஒண்ணும் செஞ்சுக்கலை .. .. எங்களுக்கு என்ன செஞ்சு கிழிக்கப் போறீங்கன்னு கேட்கறhங்க *

==========

4. எதுக்குத்தான் எது இனாம் கொடுக்கறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு

எதுக்குப் புலம்பறீங்க .. .. ?

அந்த பாருங்க மாட்டுச் சந்தையில ரெண்டு மாடு வாங்கினா இந்த ஆடு இலவசம்னு சொல்றார் அந்த வியாபாரி

==========

5. சார் நீங்க சமயத்துல ஆயிரம் ரூபா குடுத்து உதவி பண்ணீங்க உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.

என்ன சார் இதுக்குப் போய் நன்றி சொல்றீங்க

அப்படீன்னா இன்னொரு ஆயிரம் ரூபா குடுங்க சார்!

==========

6. என்ன உங்க வீட்டுக்காரர் எப்ப பார்த்தாலும் வீட்டுக்கு வெளியவே நிக்கிறார்

வீட்டுக்கு மேலே திருஷ்டி பொம்மை வச்சிருந்தோம் அது எங்கேயோ காணாம போயிடுச்சு அதுதான் அவரை நிக்க வச்சிருக்கோம்.

==========

7. வெயில் தாங்க முடியலியாம் காருக்குள்ள இருந்தே நடிக்கிறேன்னு ஹிரோயின் சொல்றாங்க.

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:


8. நாயை டெஸ்ட் செய்த டாக்டர் அது கர்ப்பமாக இருப்பதாகச் சொன்னார் அந்தப்
பெண்ணுக்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது.

அதுக்கு வாய்ப்பே இல்லை இந்த நாயை நான் வீட்டுக்குள் கதவைப் பூட்டி வளர்கிறேன் வேறு நாயும் உள்ளே வராது பிறகு எப்படி .. ? என்றாள்.

இந்த நாயோடு சேர்த்து இன்னொரு நாய் வளர்க்கிறீர்களே அது ஆண்நாய்தானே ? என்று கேட்டார் டாக்டர்.

உடனே அந்தப் பெண் முட்டாள்தனமா பேசாதீங்க டாக்டர் அந்த நாய் இவளோட அண்ணன் என்றாள்.

பிட்டு - 77

1. எது எதுக்குதான் போராட்டம் நடத்தறதுன்னு நம்ம தலைவர்க்கு விவஸ்தை இல்லாமப் போச்சு.

ஏன் என்னாச்சு?

கடுமையான வெய்யிலைக் கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போறாராம்.

==========

2. நேத்து ராத்திரி என் மனைவியை நான் கைநீட்டி அடிச்சுட்டேன்.

ஐயோ அப்புறம் என்னாச்சி?

அதுக்குள்ள என் மனைவி என்னை எட்டி உதைச்சி வேலைக்குப் போக நேரமாச்சு எழுந்திரின்னு கனவைக் கலைச்சுட்டா.

==========

3. மகன்: அப்பா .. .. எங்க ஸ்கூலில் அப்பாவின் உழைப்பு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடக்கப் போகிறது என்ன எழுதலாம்?

அப்பா - நான் ஆபீஸில் உழைப்பதைப் பற்றி மட்டும் எழுது. வீட்டில் மாவாட்டுவதை எல்லாம் எழுதித் தொலைக்காதே.

==========


4. அன்பே வாங்க ஒடிப் போயிடலாம் கூழோ கஞ்சியோ நீங்க ஊத்தறதை நான் சாப்பிட்டுக்கறேன்.

சந்தடிச்சாக்குல சமையல் வேலையை என் தலைலகட்டறே பாத்தியா?

==========


5. நீங்க ஒரு காரியம் பண்ணணுமே டாக்டர்.

நான் ஆபரேஷன் வரைக்கும் மட்டும்தான் பண்ணுவேன் காரியம் எல்லாம் என்னால பண்ணமுடியாது.

==========

6. நம்ம தலைவருக்குப் பொருளாதாரம் பத்தி ஒண்ணுமே தெரியலையே ஏன் ?

பணவீக்கத்தைக் குறைக்கறதுக்கு அயோடெக்ஸ் தடவலாம்னு பேசியிருக்காரு.

==========

7. அந்த ஹார்ட்வேர் இஞ்சினீயர் ஃப்ராடுன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க ?

இது மூலிகையால செஞ்ச சி.டி. இதை உபயோகிச்சா வைரஸ் செத்துடும்னு சொல்றாரு.

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:


8. ஷூட்டிங் ஸ்பாட்ல பாடி-யை கையில வெச்சுக்கிட்டு அலையறாரே யார் அவர் ?

அவர் தான் அந்த நடிகையோட பாடிகார்டு.

பிட்டு - 76

1. ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம், "என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள்!" என்று பதட்டத்துடன் சொன்னார்.

மானேஜர்: "அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"

வந்தவர்: "ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!"

==========

2. "படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுறாமீன்கள். தப்பிக்க என்ன செய்வீர்கள்?"

"சிம்ப்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்."

==========

3. நீதிபதி:ஏம்மா அவரை உலக்கையாலே அடிச்சுக் கொன்னே?

பெண்:உரலைத் தூக்க முடியல்ல சாமி!

==========

4. சே... அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.

பேசட்டுமே சார்... நம்ம கட்சிப் பிரமுகர்தானே.

நீங்க வேற ... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்!

==========

5. அந்த ஆஸ்பத்திரியில ஆறாம் நம்பர் ரூமும், நூறாம் நம்பர் ரூமும் ஆபரேஷன் தியேட்டர்...

ஆறுலேயும் சாவு.. நூறுலேயும் சாவுன்னு சொல்லுங்க.

==========


6. நான் வெச்சிருந்த விஸ்கி பாட்டிலைத் தூக்கி என் மனைவி கிணத்துல போட்டுட்டா...

அதான் குடி முழுகிப் போனா மாதிரி இருக்கீங்களா?

==========


7. மாமியாரையும் மருமகளையும் ஒரே வீட்டுல வெச்சுக்கிட்டு குப்பைக் கொட்றது ரொம்ப கஷ்டமா இருக்கு...

ஏன்..

வீட்டில ஒரே ஒரு துடப்பமும் முறமும்தான் இருக்கு.

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்:


8. ரொம்ப கவலையா இருக்கே போலிருக்கு என்னாச்சு ? முகம் தொங்கிப்போய் வந்த அவனைக் கனிவோடு விசாரித்தான் நண்பன்.

”நான் அப்பாவாகப் போறேன்” என்ற அவனது பதிலில் சோகம் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

”வாவ் சந்தோஷமான சமாசாரமாச்சே, இதுக்குப் போய் ஏண்டா கவலைப்படறே”

”என்ன சந்தோசமான சமாசாரம் ? இந்த விஷயம் இன்னும் என் பெண்டாட்டிக்குத் தெரியாது”

பிட்டு - 75

1. நான் கொடுத்த ராஜினாமா கடிதத்தைக் கட்சி மேலிடத்துல வாங்க மறுத்துட்டாங்க

ஏன் ?

பதவியில இருக்கறவங்கதான் அதெல்லாம் கொடுக்கணுமாமே

==========

2. கார் ஒட்டக் கத்துக்கறதா சொன்னீங்களே .. இன்னும் முழுசா கத்துக்கலையா ?

இல்லே கொஞ்சம் கொஞ்சமா இப்பத்தான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்

இப்போதைக்கு என்ன கத்துக்கிட்டிருக்கீங்க .. ?

ஹாரன் எப்படி அடிக்கறதுன்னு

==========

3. பக்கத்து வீட்டுக்காரி காபி சாப்பிடணும்னா அதுக்காக எதைத்தான் இரவல் கேட்கறதுன்னு இல்லியா ?

காபி போடியா, சர்க்கரையா எதை இரவல் கேட்டாங்க ?

ரெண்டும் இல்ல காபி போட்டுத்தர அஞ்சு நிமிஷம் என் கணவரை இரவலா அனுப்பணுமாம்

==========

4. நாங்கதான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டோமோ பையன் ரொம்ப சிக்கனம்னு .. ..

இருக்கலாம் அதுக்காக ஹனிமூனுக்குகூட பெண்ணை விட்டுட்டு தனியாப் போறேன்னு செல்றது நல்லாயில்லே

==========

5. நான் மனசு வெச்சா அந்த மார்வாடி கடைல எவ்வளவு வேணம்னாலும் கடன் வாங்குவேன்

நகையை வெச்சாதானே கடன் கொடுப்பாங்க மனசை வெச்சாக் கூடவா கொடுப்பாங்க ?

=========

6. எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு .

இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு

=========

7. நடிகையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது நல்லதா போச்சு

எப்படி

அவ கோபமா கத்தும் போது “டேக் ஓகே” ன்னு நான் சொல்லிட்டா ரிலாக்ஸ் ஆயிடுறா.


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:

8. வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா?

இப்போதைக்கு சின்ன வீடு போதும்னு ஜோசியர் சொன்னார்..

பிட்டு - 74

1. டாக்டர் அந்த 10-ம் நம்பர் பேஷண்ட் தெர்மாமீட்டரை முழுங்கிட்டாரு

அப்படியா ஒரு ஸ்கேன் எடுத்து தெர்மாமீட்டர்ல என்ன டெம்பரேச்சர் காட்டுதுன்னு பார்த்துடுங்க

==========

2. சர்வர் .. .. எல்லா டேபிள்லயும் ஒரு அயர்ன்பாக்ஸ் இருக்கே எதுக்கு ?

தோசை சூடு பத்தலைன்னா அயர்ன் பண்ணிக்கலாம்

==========

3. உன் மனைவிக்கும் உங்கம்மாவுக்கும் சண்டை வந்தா நீயும் உங்கப்பாவும் எந்த பக்கம் இருப்பீங்க ?

நான் வாசல் பக்கமா எங்கப்பா கொல்லைப் பக்கமா

==========

4. சின்ன ஆபரேஷன்தான் பயப்பாடதீங்கனு நர்ஸ் ஆறுதல் சொன்னாங்க

பரவாயில்லையே...

ஆறுதல் சொன்னது எனக்கு இல்லை ஆபரேஷன் பண்ணப் போற டாக்டருக்கு

==========

5. எங்க அப்பா இனிமே என்னைத் தண்டச்சோறுன்னு திட்ட முடியாது

ஏன் எங்கேயாவது வேலைக்குப் போறியா ?

இல்ல வீட்டுல இப்பல்லாம் டிபன்தான் சாப்பிடறேன்

==========

6. எல்லாரும் காதலிக்கு வளையல் சுண்டல்னு வாங்கித் தருவாங்க நீங்க மட்டும் ஏன் தேங்கா பழம் ஊதுபத்தி வாங்கிட்டுவரீங்க ?

எங்க காதல் தெய்வீகமானதாச்சே

==========

7. இந்தப் பிச்சைக்காரனை எதுக்கய்யா இங்க அழைச்சிட்டு வந்திருக்கே ?

வோட்டு கேட்கப் போகும்போது தொகுதி முழுக்க அறிமுகமான ஒரு நபர் கூட வரணும்னு நீங்கதானே சொன்னீங்க

==========


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:


8. இல்லத்தரசி: ஏண்டி அவர்தான் ஆம்பளை அப்படி நடந்துகிட்டாரு நீ என் தடுக்கலை ?

வேலைக்காரி: நீங்கதானே நாங்க சொல்றதை எல்லாம் தட்டாம கேட்டு நடந்தா சம்பளம் சேத்து தாரேன்னு சொன்னீங்க.

பிட்டு - 73

1. உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே சார் ..

சீ.. .. சீ .. .. அவன் பிடிக்கறதுக்கு முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்

==========

2. டாக்டர், நான் நூறு வயசு வரைக்கும் இருப்பேன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு.

அப்ப சரி நானா ஜோசியரான்னு ஒரு கை பார்த்துடுவோம்.

==========

3. உங்க ஊர்ல இவ்வளவு தண்ணி கஷ்டமா ?

ஏன் கேட்கறீங்க ?

ஒட்டல்ல காசு இல்லாம தண்ணி குடிச்சதுக்கே மாவாட்ட சொல்லிட்டாங்க

==========

4. அதோ போறாங்களே அவங்ககிட்ட நிறைய விடியோ காஸெட், காமிரா எல்லாம் இருக்கு

விடியோ கடை வெச்சு இருக்காங்களா ?

ஊஹூம் ஆசிரமம் வெச்சு நடத்தறாங்க

==========

5. அந்த ஆசிரமத்துல இருக்கிற நாய் ஏன் பயங்கரமா குரைக்குது ?

அதுவா யாரோ நிஜ சாமியார் உள்ளே நுழைஞ்சிருக்காராம் அதான்

==========

6. யுவர் ஆனார் என் சார்பா வாதாட வக்கீல் யாரும் இல்லை

அதுக்காக .. .. ?

நீங்களாவது என் சார்பா தீர்ப்பு சொல்லக்கூடாதா ?

==========

7. தண்ணியில் வாழும் உயிரினம் மூன்று கூறு ?

தவளை., மீன், எங்கப்பா

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு

8. என் கணவருக்கும் எங்க வீட்டு வேலைக்காரிக்கும் தொடர்பு இருக்குமோனு சந்தேகமா இருக்கு.

எதை வைச்சு அப்படிச் சொல்றே ?

நான் என் கணவரைத் திட்டினா ”மனசை சரியில்லை” ன்னு அன்னிக்கி லீவு எடுத்துக்கிட்டு போயிடுறான்னா பாருங்களேன்.

==========

பிட்டு - 72

1. அந்த காதல் ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வைச்சது தப்பாப் போச்சு ஏட்டைய்யா..

ஏன் சார்..

இப்போ வளைகாப்பு பண்ணி வையுங்கன்னு வந்து நிக்கிறாங்க.

=========

2. .உங்க கணவருக்கு எங்காவது ஓடிப்போகனும்னு போல தோணிக்கிட்டே இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..

சரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை.. என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க.

=========

3. என் சம்பந்தி அரைகுறையா எதையோ தெரிஞ்சுக்கிட்டு என் பொண்ணுக்கு வைரஸ் கல் மூக்குத்தி ஒண்ணு செஞ்சி போட சொல்றாராம்..

=========

4. அடுத்ததாக நம் தலைவர் கட்சியில் துரோகம் செய்த சில முக்கிய புள்ளிகளை மேடையிலிருந்து தூக்கியெறிய இருப்பதால் அருகில் அமர்ந்துள்ள அணைவரும் சற்று தள்ளி அமர்ந்து

கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

==========

5. அவன் தற்கொலை செய்து கொள்வதாக முடிவு பண்ணினான். விஷம் அருந்தலாமா.. தூக்கில் தொங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, கடைசியில்.. ரெயில் முன்

பாய்வதுதான் சரியான ஐடியாவாக தோன்றியது..

தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் தன் முடிவைச் சொல்லிவிட்டு, ஒரு நாள் சாயந்திரம் ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளோடு புறப்பட்டான். அத்தனை மூட்டைகளிலும் சிக்கன், மட்டன்

என்று அசத்தலான சாப்பாட்டு அயிட்டங்கள்

பார்த்தவர்கள் வியந்தார்கள்.

ஆமா.. ரெயில்ல பாய்ஞ்சு தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொல்றே.. அப்புறம் எதுக்கு இத்தனை சாப்பாடு மூட்டைகள்?

அவன் சொன்னான்.. சரியாப் போச்சு போங்க..அந்த வௌஸ்தை கெட்ட ரயில் லேட்டா வந்துச்சுன்னா, பசியிலேயே நான் செத்துடமாட்டேனா?

==========

6. எதுக்கு தூங்கிக்கிட்டிருக்கிற உன் கணவரை அலாரத்தை எடுத்து அடிச்சே ?

அலாரம் அடிச்சாத்தான் அவர் எழுந்திரிப்பாரு.

==========

7. பால்காரரை காதலிக்கிறதா சொன்னே .. ஆனா அவர் லாண்டரிகாரராச்சே

ஆமாண்டீ வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனச்சுட்டேன்.


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:

8. ராப்பிச்சையை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சா .. ஏன் ?

நைட் ஆனா கௌம்பிடுறாரு.

பிட்டு - 71

1. வக்கீல் சார், நீங்க ஏன் உங்க மனைவியை டைவர்ஸ் பண்ணினீங்க?

கேஸ் எதுவும் இல்லையான்னு கேட்டு தினமும் நச்சரிச்சுக்கிட்டு இருந்தா. அந்த எரிச்சல்ல டைவர்ஸ் பண்ணித் தொலைச்சிட்டேன்

=========

2. பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க ?

மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன்

==========

3. பக்கத்து வீட்டுப் பங்கஜத்திடம் பேசிவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்துடறேன்

அஞ்சு நிமிஷத்தில் வந்திடுவியா?

ஆமாங்க, நீங்க அரை மணிக்கு ஒரு தரம் அடுப்பில் இருக்கறதை கிண்டிவிட்டுடுங்க

==========

4. அந்த ஆள் பயங்கர குடிக்காரர்.

நிஜமாவா .. ?

ஆமாம், வெளியூருக்கு எங்கயாவது போனாகூட சரக்கு ரயில்லதான் போவாருன்னா பாருங்களேன்.

==========

5. பரீட்சை அறையில் ஏண்டா தூங்கினே ?

பதில் தெரியாட்டி முழிச்சுக்கிட்டு இருக்காதே-னு நீங்கதானே சொன்னீங்க

==========

6. வெயில் காலம் வந்தால் உனக்குப் பைத்தியம் பிடிக்குமாமே உண்மையா?

எந்த நாய் அப்படி சொல்லிச்சி...

=========

7. உங்க படத்துல இடைவேளையப்போ தேவையில்லாம் ஒரு குண்டு வெடிப்புக் காட்சி வருதே எதுக்கு?

நல்லா தூங்கிட்டிருக்கிற எல்லோரையும் எழுப்பி விடத்தான்..

========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:

8. டாக்டர் 22-ம் நம்பர் ரூம்ல வச்சிருந்த பாடியைக் காணல.. டாக்டர்..

சரி சரி கவலைப் படாதே புதுசா ஒண்ணு நானே வாங்கித் தரேன்..