1. இனிமே மனிதப் பிறவியே எடுக்காம இருக்க என்ன செய்யணும் சாமி...?
ஏன் கேட்கிறாய் மகனே ?
என் மனைவி ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கே மனைவியா வரணும்னு வேண்டிக்கிறாளே
==========
2. என் கண் எதிர்லயே கல்யாண வீட்டுல செருப்பை திருடிட்டு போயிட்டான்...
செருப்பு உங்களுதா...?
இல்லை... நான் எடுத்துட்டு போலாம்னு பார்த்து வெச்சிருந்த செருப்பு
==========
3. டாக்டர்: எதுக்கு நாதஸ்வரத்தைக் கொண்டுவந்து என்கிட்டே காட்டுறீங்க...?
வித்வான்: நீங்கதானே என்னோட பீப்பி பார்க்கணும்னு சொன்னீங்க...
==========
4. அந்த டாக்டர் ஆபரேஷனைவிட, போஸ்ட்மார்ட்டத்தின் போதுதான் ரொம்ப ஜாக்கிரதையா இருப்பாரு..
ஏன் ?
கத்தியை உள்ளே வெச்சுட்டா அப்புறம் கிடைக்காதே...
==========
5. ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சா...?
உறவுக்கார்களுக்கு தந்திகூட கொடுத்தாச்சு டாக்டர்...
==========
6. டாக்டர்... ஒரு மாசமா துhக்கமே வரலை...
ஒரு மாசமா என்ன பண்ணீங்க...?
முழிச்சிட்டு இருந்தேன் டாக்டர்...
==========
7. டாக்டர் அந்த ஆளுக்கு கிட்னில கல் இருக்குன்னு சொன்னதும் அவர் எதுக்கு ஜோசியர்கிட்டே போறாரு...?
ராசியான கல்லான்னு பார்க்கறதுக்காம்...
==========
இன்னிக்கு இது தாங்க மெகா ஜோக்கு:
8. மிஸ்டர் மொக்கைக்கு காவல்துறையில் அதிகாரியாக வேலை கிடைத்தது.. முதல்நாள் புல்லட் மோட்டார் சைக்கிளில் கம்பீரமாக பவனி வந்தபோது, வயர்லஸ் கூவிற்று..
"7 வது தெருவுக்கு உடனே செல்லுங்கள்.. அங்கு சட்டவிரோதமாக கூடி நிற்கும் கும்பலைக் கலைத்துவிட்டு அறிக்கை தாருங்கள்.."
சக அதிகாரி துணைக்கு வர 7 வது தெருவுக்கு விரைந்தார் மொக்கை. அங்கே எதையோ எதிர்பார்த்துக்கொண்டு ஒரு கும்பல் அமைதியிழந்து நின்றுகொண்டிருந்தது. ஸ்டைலாக போய் இறங்கிய மொக்கை முழங்கினார்..
"உடனே இடத்தைக் காலி செய்யுங்கள்..! இது என் உத்தரவு..!'
கும்பலில் இருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்..ஆனால் இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை.. மொக்கைக்கு அவமானமாகப் போய்விட்டது.. சட்டென்று துப்பாக்கியை உருவி, வானை நோக்கிச் சுட்டு மீண்டும் உத்தரவிட்டார்..
"எல்லோரும் உடனே கலைந்து செல்லுங்கள்.. அல்லது அடுத்த குண்டு உங்கள் தலையில் திணிக்கப்படும்..!"
கூட்டம் மொக்கையை வெறித்துப் பார்த்தவாறே கலைந்து சென்றது.. வெற்றிச்சிரிப்புடன் சக அதிகாரியைக் கேட்டார் மொக்கை..
"முதல் அசைன்மெண்ட்டே கலக்கிட்டேன்ல..?"
சக அதிகாரி சற்று யோசனையுடன் சொன்னார்...
"மிஸ்டர் மொக்கை.. நான் அப்படி நினைக்கவில்லை.. தேவையில்லாமல் துப்பாக்கிக் குண்டுகளை வீணாக்கியதற்கும், 6 வது தெருவில் பேருந்துக்காக காத்திருந்தவர்களை விரட்டி அடித்ததற்காகவும் நீங்கள் மேலிடத்தில் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும்..!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment