Friday, July 3, 2009

பிட்டு - 4

1. டாக்டர் தொழிலும் இப்ப வியாபாரமா போச்சு...
எப்படி சொல்றீங்க ?
பாருங்க... அந்த டாக்டர் புது வருஷம் ஜனவரி ஒண்ணாம் தேதி அன்னிக்கு ஜுரத்தோட வர்றவங்களுக்கு ஒரு தர்மாமீட்டர் ஃப்ரீயா கொடுக்கறாராம்...
==========
2. நான் நூறு வயது வாழ என்ன டாக்டர் பண்ணணும் ?
போச்சுடா, உங்களை என் கிளினிக் பக்கம் வரக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது?
==========
3. அவருக்கு தொழில்ல ஜாண் ஏறினா முழம் சறுக்கறது. அதனால தொழிலையே விட்டுட்டாரு!
அவரு என்ன தொழில் பண்றாரு ?
தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிக்கிற தொழில்.
==========
4. சென்னையை நோக்கிப் போய்க் கிட்டிருந்த பஸ் ஒரு ஊரிலே நின்னதும் பின் சீட்டிலே இருந்த ஒரு அம்மா முன்சீட்டிலே இருந்த இன்னொரு அம்மாவோட தோளைத் தொட்டு, ஏங்க "இது செங்கல்பட்டா" ன்னு கேட்டாங்க.
அதுக்கு அம்மா திரும்பிப் பார்த்து, "இது செங்கல்பட்டு இல்லை, சின்னாளப் பட்டு" -ன்னுது.
==========
5. நம்ம இன்ஸ்பெக்டர் டியூட்டியில ரொம்ப கரெக்ட்
எப்படிச் சொல்ற ?
நேத்து சந்தேக கேஸ்ல அவரோட தம்பியைத் தெரியாமப் புடிச்சிகிட்டு வந்துட்டேன். மனுசன் மாமூல் வாங்காம அவரை விடலியே
==========
6. அந்த டாக்டருக்கு ரொம்ப கிண்டலா போச்சு!
எப்படி ?
தலை ரொம்ப சுத்துதுனு சொன்னா, கண்ட்ரோல் பண்ண ரெகுலேட்டர் வைக்கட்டுமா-னு கேக்கறார்.
==========
7. உன் மகளுக்குத் திருமண ஆசை வந்துடுச்சின்னு எப்படிச் சொல்றே ?
முகூர்த்த நாளெல்லாம் காலண்டர்ல பெரிய வட்டம் போட்டு வைச்சிருக்காளே!
==========

இன்றைய மெகா ஜோக்:

8. கணவனும் மனைவியும் ரோட்டிலே நடந்து போய்க்கிட்டு இருந்தாங்க. எதிர்த்தாப்பல மூணு பெண்கள் நடந்து வர்றதைப் பார்த்ததும் கணவனோட பார்வை அவங்க மேலே போயிருச்சி.

மனைவி கணவனோட விலாவிலே முழங்கையாலே ஒரு இடி இடிச்சி, "பார்வை என்ன அங்க போவுது. கண்ணைத் தோண்டிப் போடுவேன்" னுது.

பதறிப் போன கணவன், "அய்யய்யோ, நான் தப்பா பார்க்கலைம்மா. அங்கே நடுவுல வர்ற பொண்ணு கட்டியிருக்கிற புடவை ரொம்ப நல்லாயிருக்கு. அது மாதிரி உனக்கு எடுக்கலாமான்னு பார்த்தேன்"

"ம்ம்... அப்படின்னா நல்லா பாருங்க" ன்னு மனைவி அனுமதி கொடுத்திருச்சி.

No comments:

Post a Comment