1. ''பத்தாம் நம்பர் பேஷன்ட்டை அடிக்கடி திட்டிட்டு வர்றீங்களாமே... ஏன்?''
''நீங்கதானே டாக்டர்... ஒரு மணி நேரத்துக்கு ஒரு தரம் அவருக்கு ஒரு டோஸ் தரணும்னீங்க!''
==========
2. அந்த டாக்டர் கொஞ்சம் சினிமா பைத்தியம் போலிருக்கு.. .
ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல கரண்ட் கட்டாச்சுன்னா உடனே விசிலடிக்கிறாரு.. .
==========
3. ஸ்கூல் வாத்தியார் உலக மேப்பைக் காட்டி, பையன்கிட்டே இந்தியா எங்கே இருக்கு காட்டு.. ? னு சொன்னார்.பையன் அமைதியா இருந்தான்.
ஏண்டா, உனக்குத் தெரியுமா, தெரியாதா .. ? னு வாத்தியார் கேட்டதுக்கு,
தெரியும்.. . ஆனா, நான் தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் சார்..னு சொன்னான் அந்தப் பையன்
==========
4. ஓவியப் போட்டி ஒண்ணு நடந்தது. சின்னப் பசங்க நிறையப்பேரு படம் வரைஞ்சு கொடுத்தாங்க. ஒரு பையன் கொடுத்த பேப்பர் மட்டும் வெள்ளையா இருந்தது.
மாஸ்டருக்குப் பயங்கர கோபம்.
என்னடா இது ?னு கேட்டார்.
ஒரு ஆடு புல் திங்கற ஓவியம் சார். னான் பையன்.
மாஸ்டருக்குக் குழப்பமாயிடுச்சு, ஆடு, புல் எல்லாம் எங்கேடா ? னார்.
புல் எப்படி இருக்கும் சார் ? அதுதான் ஆடு தின்னுடுச்சேன்னான் பையன்
அப்படின்னா ஆடாவது இருக்கணுமே.. .? னார் மாஸ்டர்.
புல் இல்லாத இடத்தில் ஆட்டுக்கு என்ன சார் வேலை ? அதனால் ஓடிப் போயிடுச்சுன்னான் பையன்.
==========
5. ரோட்டில் ரெண்டு பேர் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கிட்டிருந்தாங்க. பக்கத்தில் ஒரு பையன் நின்னு அப்பா, அப்பானு அழுதுட்டிருந்தான். அந்த வழியா போன ஒருத்தன். அந்த பையனிடம் என்னடா பிரச்னை.. ஏன் அழறே?னு கேட்டான்.
அந்தப் பையன் அப்பா, அப்பானு தொடர்ந்து அழுதான். சண்டை போட்டுக்கிட்டிருக்கற ரெண்டு பேர்ல உங்கப்பா யாருடா ?னு கேட்டதுக்கு அதுக்குத்தான் ரெண்டு பேரும் சண்டை போடறாங்கனு சொல்லிட்டு மறுபடியும் அழுதான் அந்தப் பையன்.
==========
6. ஊதாரித்தனமாக செலவு பண்ணும் தனது மகனுக்கு பாக்கெட் மணி தருவது தொடர்பாக மனைவியிடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார் அவர். டார்லிங் இனிமே அவன் திருந்திடுவான்னு நெனைக்கிறேன். ஒவ்வொரு ரூபாயும் எவ்வளவு மதிப்பானதுன்னு நேத்து ராத்திரி விலாவாரியா அவனுக்கு எடுத்துச் சொல்லியிருக்கேன்
ஓகோ. .. நீங்கதானா அது ?
எது ?
இன்னிக்கு காலை என்கிட்டே வந்து, ரூபாய்க்கு இவ்ளோ மட்டமான மதிப்பு இருக்கிறது நேத்துதான் தெரிஞ்சது. பாக்கெட் மணியை டாலர்ல கொடு-னு அவன் அடம்பிடிச்சானே.. . அது உங்களாலதானா ?
==========
7. என்ன அந்த அரசியல்வாதி சலுhன்காரர்கிட்டே போய் தகராறு பண்றாரு .
முடிவெட்டும்போது அவருக்குப் போத்தின துண்டை அவருக்கே கொடுக்கணுமாம்.
==========
இன்றைய மெகா ஜோக்:
8. டி.வி-யில் சின்னவீடு படம் ஓடிக்கிட்டிருந்தது. என் அண்ணா பையனுக்குப் பன்னிரண்டு வயசு. அவன் என்கிட்ட வந்து சித்தப்பா, சின்னவீடுன்ன என்ன ?னு கேட்டான்.
எனக்குத் தர்மசங்கடமா இருந்தது. நீ படிக்கிற பையன். இதெல்லாம் இப்ப தெரிஞ்சுக்க வேண்டாம். பின்னால தெரிஞ்சுக்கலாம். இப்ப போய் படிடான்னு சொன்னேன்.
அதுக்கு அவன் நீங்க சொல்லுங்க சித்தப்பா.. . நான் இப்பவே தெரிஞ்சு வெச்சுக்கறேன்னு சொன்னான்.
அடப்பாவி தெரிஞ்சு வெச்சக்கறது இல்லடா சின்னவீடு. தெரியாம வெச்சுக்கிட்டாதான் சின்னவீடுனு பதில் சொல்லி வெச்சேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment