1. ஏங்க ஷாஜகான் மும்தாஜின் நினைவா தாஜ்மஹால் கட்டினார். நீங்க என் நினைவா என்ன கட்டுவீங்க ?
எனக்கு அவ்வளவு வசதியில்லை... வேணும்னா உன் தங்கச்சியைக் கட்டிக்கிறேன்
==========
2. இருந்தாலும் நம்ம தலைவர் இப்படி முட்டாள்தனமா இருக்கக்கூடாது
ஏன் - என்னாச்சு ?
இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். இதில் ஏதோ எதிர்க்கட்சிக்காரர்களின் சதி உள்ளது அப்படின்னு மேடையில் பேசுறார்.
==========
3. மனைவியை அடிச்ச குற்றத்துக்காக உனக்கு என்ன தண்டனை தந்தாங்க ?
இரண்டு பேரும் சேர்ந்து வாழணும்னுட்டாங்க
==========
4. என்ன இது... பிளாட்பாரத்தை இப்படி அசிங்கம் பண்ணி வச்சிருக்காங்க ?
நடைபாதையைப் பயன்படுத்தவும்-னு போர்டு வச்சதை ஜனங்க தப்பா புரிஞ்சிகிட்டாங்க
==========
5. குருவே சாந்தியைத் தேடி வந்துள்ளேன்.
சிஷ்யா இந்த ஆசிரமத்திலே சாந்தினு யாரும் இல்லை. அடையாறு பிரிவுல ஒரு ஆசிரமம் இருக்கு. அங்கே விசாரிச்சுப் பாரு.
==========
6. வேட்டையாடுவதில் விருப்பமுள்ள ஒரு அப்பாவுக்கு வினோதமான ஒரு ஆசை. குறி தவறாது சுடும் தனது திறமையை மகன் எதிரில் நிரூபிக்க விரும்பினார். ஒரு நாள் வேட்டைக்குப் போகும்போது மகனையும் கூடவே அழைத்துக் கொண்டு போனார்.
சற்று தூரத்தில் கொக்கு ஒன்று அமர்ந்திருந்தது கண்டு அப்பாவுக்கு குஷி *
சில நிமிடங்கள் துப்பாக்கி முனையில் கொக்கை குறிபார்த்துவிட்டு, மகனே... இப்ப பார் என்றபடி ட்ரிகரை அழுத்தினார். கொக்கு செத்துவிழப் போகிறது என்று மகன் எதிர்பார்க்க, துளி காயமுமின்றி எம்பிப் பறந்தது கொக்கு. அப்பாவை மகன் நகைப்போடு பார்க்க, சிறிதும் தயங்காமல் அவர் சொன்னார் - மகனே .. ஒரு அதிசயத்தைப் பார்க்கிற பாக்கியம் உனக்குக் கிடைச்சிருக்கு. அதோ பார்... செத்துப்போன ஒரு கொக்கு பறந்துக்கிட்டிருக்கு
==========
7. மிஸ்டர். மொக்கை ஏதோ வேலையாக அஞ்சலகம் போனார். அங்கு ஒரு கிராமவாசி தனக்காக ஒரு அஞ்சலட்டை எழுதித்தர வேண்டினார். மொக்கையும் மகிழ்வுடன் அக்கிராமவாசி சொன்னதை எழுதித்தந்தார். கடைசியாக அட்டையில் இன்னும் இடமிருக்கவே, வேறேதும் எழுதவேண்டுமா என மொக்கை வினவினார். சற்று யோசித்த கிராமவாசி சொன்னார்..
"கையெழுத்து கேணத்தனமா இருக்கறத்துக்காக மன்னிச்சுடுங்க"ன்னு எழுதுங்க சாமி..!
==========
இன்றைய மெகா ஜோக்:
8. மிஸ்டர் மொக்கை பாரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.. பேண்டின் பின் பாக்கெட்டில் ஒரு குவார்ட்டர் பாட்டில் வேறு வைத்திருந்தார்.. வழியில் வாழைப்பழத் தோலில் வழுக்கி தொபீர் என்று கீழே விழ, பின்பக்கம் முழுவதும் கசகசவென்று ஒரே ஈரம்..
அதிர்ச்சியடைந்த மொக்கை இறைவனிடம் வேண்டினார்..
"கடவுளே..! இந்த ஈரம் அடிபட்ட ரத்தமாகவே இருக்கட்டும்.. குவார்ட்டர் பாட்டில் உடைந்து போயிருக்கக் கூடாது..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment