1. டாக்டர், "உங்களுக்கு புகையிலை போடுற பழக்கம் உண்டா?" ன்னு கேட்டார்.
நோயாளி, “உண்டுங்க என்னோட நாலு ஏக்கர் நிலத்துலேயும் புகையிலைதான் போட்டிருக்கேன்”
==========
2. ஒரு நர்சிங் ஹோம்லே ஒரு நர்சம்மா எல்லா நோயாளிகளுக்கும் மாத்திரை கொடுத்துட்டு கொஞ்ச நேரம் கழிச்சி திரும்பி வந்தாங்க.
ஒரு நோயாளி புலம்பினாரு, ”என்ன நர்சம்மா, மத்தவங்களுக்கு எல்லாம் பொடிப் பொடி மாத்திரையாக் கொடுத்தீங்க. எனக்கு மட்டும் ஏன் நீளமான மாத்திரையாக் கொடுத்தீங்க? ரொம்பக் கஷ்டப்பட்டு முழுங்கினேன். இனிமே எனக்கும் பொடி மாத்திரையாக் கொடுங்கம்மா” -ன்னாரு.
நர்சம்மா-வுக்குச் சிரிப்பு தாங்கலை, ”ஏம்பா உனக்கு நான் கொடுத்தது மாத்திரை இல்லை. காய்ச்சல் எவ்வளவுன்னு பார்க்கிறதுக்குத் தெர்மாமீட்டரைத் தானே வச்சிட்டுப் போனேன். உன்னை யார் முழுங்கச் சொன்னா ?”
===========
3. இப்போ எதுக்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிடுற மோகம் வந்துருச்சி. ஒரு டாக்டர் வயதைக் குறைக்கிற மாத்திரை கண்டுபிடிச்சாராம். மாத்திரை விலை ரொம்ப காஸ்ட்லி.
ஒரு பணக்காரப் பெண்ணுக்கு தன்னோட வயசைக் குறைச்சுக்கணும்னு ஆசை. நிறையப் பணம் கொடுத்து முப்பது மாத்திரை கொண்ட ஒரு டப்பா வாங்கினாங்க. எதுக்கும் இருக்கட்டுமேன்னு இன்னும் இரண்டு டப்பா சேர்த்து வாங்கிக்கிட்டாங்க. தினம் ஒரு மாத்திரை சாப்பிட்டுக் கிட்டே வந்தாங்க. 30 நாள் முடிஞ்சதும் 50 வயசுக்காரியான அந்தம்மா 20 வயசு இளம் பெண்ணா மாறிட்டாங்க. டாக்டரை பார்க்க வந்தாங்க.
”நீங்க யாரு ?” ன்னாரு டாக்டர்.
”வயசு குறைக்கிற மாத்திரை வாங்கிட்டுப் போனது நான் தான். மாத்திரை ரொம்ப எஃபக்டிவா வேலை செஞ்சிருக்கு.”
”அப்படியா, ரொம்ப சந்தோஷம் உங்க இடுப்பிலே இருக்கிற குழந்தை யாரு?” ன்னாரு டாக்டர்.
”அவர்தான் டாக்டர் என் ஹஸ்பெண்ட் எனக்குத் தெரியாம தினம் ரெண்டு மாத்திரையாத் தின்னுருக்கார். இப்படிக் குழந்தை ஆயிட்டார். இப்போ வயசைக் கூட்டறதுக்கு ஏதாவது மாத்திரை இருக்கா?” ன்னாங்களாம்.
இப்படி ஒரு பிரச்சினை வரும்னு டாக்டர் எதிர்பார்க்கவே இல்லை.
==========
4. ரொம்பப் பலகீனமா இருந்த ஒரு நோயாளிக்கு, ”மீன் மாத்திரை சாப்பிடு” ன்னு சொல்லிக் கொடுத்தார் டாக்டர். மறுநாள் டாக்டர்கிட்டே வந்த அந்த ஆள் ஏகப் பட்ட கூச்சல் போட்டான். ”டாக்டர், நீங்க எனக்குக் கொடுத்தது மீன் மாத்திரையே கிடையாது. ஒரு மாத்திரையிலே கூட முள் இல்லையே”
==========
5. ஒருத்தன் ஒரு மெடிகல் ஷாப்பிலே போய் மூணு மாசத்துக்கு மட்டும் வேலை கேட்டான். அதென்ன மூணு மாசம் ?னு கடைக்காரர் கேட்டார்.
மூணு மாசத்துக்கு வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிடணும்னு டாக்டர் எழுதிக் கொடுத்திருந்தார். அதுக்கு இது வசதியா இருக்கும்ன்னுதான்-னு அவன் சொன்னான்.
இவனை வேலைக்குச் சேர்த்தா கடை என்ன ஆகும் ? தின்னே தீர்த்திடுவானே!
==========
6. பல்வலின்னு ஒருத்தர் டாக்டர் கிட்டே போனார். டாக்டர் ”ஆ” காட்டுங்கன்னாரு. காட்டினா பிறகு இன்னும் கொஞ்சம் ”ஆ” காட்டுங்கன்னாரு. இன்னும் கொஞ்சம் பெரிசா... வாயைத் திறங்கன்னார். உடனே நோயாளி ”டாக்டர் பல்லை வெளியே இருந்து பிடுங்கப் போறீங்களா, வாய்க்கு உள்ளே இறங்கி பிடுங்கப் போறீங்களா” -ன்னு கேட்டார்.
==========
7. ஒருத்தரை டெஸ்ட் பண்ணின டாக்டர், ”உங்களுக்கு சுகர் வந்திருக்கு. மாத்திரை எல்லாம் தர்றேன். அது மட்டும் போதாது. தினம் 5 கி.மீ. வாக்கிங் போகணும். பத்தாவது நாள் எனக்கு போன் பண்ணுங்க, மேற்கொண்டு என்ன செய்யலாம்னு சொல்றேன்” னார்.
பத்தாவது நாள் அந்த ஆள் போன் பண்ணினான். ”டாக்டர், நீங்க சொன்ன மாதிரி தினம் 5 கி.மீ. நடந்து இப்போ 50-வது கி.மீட்டர்லே நிக்கிறேன். மேற்கொண்டு என்ன செய்யணும் சொல்லுங்க” ன்னான்.
==========
அப்புறம் இன்றைய மெகா ஜோக்:
8. இன்னொருத்தன் இப்படித்தான் பல் வலின்னு போனான். ”பல்லைப் பிடுங்கித்தான் ஆகணும். வலிக்காம இருக்க மயக்க மருந்து ஊசி போடறேன்” -னாரு டாக்டர்.
“அதெல்லாம் வேண்டாம் டாக்டர். எனக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் உண்டு. அப்புறம் நிறையத் தைரியம் வந்திடும். நீங்க பல்லைப் பிடுங்கிக்கலாம்” அப்படின்னான். டாக்டர் அவன் வழியிலேயே விட்டுட்டார். அவன் வெளியே போய் தண்ணி அடிச்சான். என்னைக்கும் ஆஃப்தான் அடிப்பான். அன்னைக்கு ஃபுல்லா அடிச்சான். ஆஃப் ஆயிட்டான். தள்ளாடிக்கிட்டே வந்து நாற்காலியிலே உட்கார்ந்தான்.
”தைரியம் வந்திடுச்சா” ன்னார் டாக்டர்.
“ஏகப்பட்ட தைரியம் வந்துடுச்சி டாக்டர்” அப்படின்னு போதையிலே உளறினான்.
”ஏகப்பட்ட தைரியம்னா ?” ன்னார்.
“எந்தப் பய என் பல்லுல கை வைக்கிறான்” னு பார்க்கிறேன் அப்படின்னான். டாக்டர் ஆடிப்போயிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment