Friday, July 3, 2009

பிட்டு - 1

1. கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ?
என்ன வித்தியாசம் ?
மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம். கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது
==========
2. நகை போடாம இருக்கிறதே மேல்
ஏன் ?
நகை போடுவது ஃபீமேல்
==========
3. தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?
என்ன செய்வாங்க ?
முழிச்சிருப்பாங்க
==========
4. தோசை நடுவில் ஏன் ஓட்டை இருக்கு ?
ஏன் ?
அதைச் சுடுகிறார்கள்
==========
5. ஏரிக்கு ஆப்போசிட் என்ன ?
என்ன ?
இறங்கி
==========
6. ஏய்யா... கிழிஞ்ச ரூபாய் நோட்டு கொடுக்கறே... இது செல்லாது... வேற கொடு
நீ மட்டும் டிக்கெட்டைக் கிழிச்சிக் கொடுக்கிறீயே... அது மட்டும் செல்லுமா ?
==========
7. உங்க ஃபேமிலி பேக்ரவுண்டைப் பத்திச் சொல்லுங்க...
எனக்கு ஃபேமிலியே கிடையாதுங்க... பேக் க்ரவுண்டும் இல்லை ஃபிரண்ட் க்ரவுண்டும் இல்லை வாடகை வீட்ல இருக்கேன்.
==========

இன்றைய மெகா பிட்டு ஜோக்:

8. இந்தப் படம் மூணாவது முறை பார்க்கும் போதுதான் புரிந்தது...
அவ்வளவு கஷ்டமான கதையா ?
ம்ஹூம்... முதல் இரண்டு தடவையும் கேர்ள் ஃப்ரெண்டோட போனேன்...

No comments:

Post a Comment