1. தொண்டன்1: நம்ம தலைவர் கதை விடுறதுல பலே கில்லாடி...
தொண்டன்2: அப்படி என்னக்கதை விட்டார்...
தொ1: நாங்க ஆட்சிக்கு வந்தால் .... இரவில் வானத்தில் பறக்கும் விமானங்களுக்கு சரியாக வழி தெரிய வானத்திலும் தெரு விளக்குகள் அமைப்போம்னு சொல்றார்.
==========
2. ஒருவர்: எதுக்கு அந்த டிராபிக் போலீஸ் காரர் விமான நிலையத்தில வந்து சண்டைப்போடுறார்.
மற்றவர்: நோ எண்ட்ரி வழியா ஒரு பிளைட் ஆகாயத்துல பறந்து போச்சாம், அதுக்கு ஃபைன் போடணும்னு சொல்றார்!
==========
3. வித்வான்:அந்தம்மாவுக்கு பெரிய நாட்டிய "தார"கைனு தான் பேரு, ஆனால் சம்பளம் ஒழுங்காவே தர மாட்டாங்க!
நண்பர்: அப்போ நாட்டிய தராத"கை"னு சொல்லுங்க!
==========
4. நண்பர்: பக்கத்து வீட்டில திருடி போலீஸ்ல மாட்டிக்கிட்டாரே கொன்னக்கோல் பாகவர் கிட்டப்பா இப்போ என்ன ஆனார்?
மற்றவர்: இப்போ அவரை எல்லாம் கன்னக்கோல் பாகவதர்னு சொல்றா!
==========
5. நண்பர்1: உங்க பிரண்டு பெரிய விஜய் ஃபேனாக இருக்கலாம் அதுக்காக பஸ்டாண்ட்ல போய் மதுரைக்கு போகாதடினு பாடிக்கிட்டு நிக்கனுமா?
நண்பர்2: நீ வேற அவன் பொண்டாட்டி கோச்சுக்கிட்டு அவங்க அம்மா ஊரு மதுரைக்கு போகுது அவங்களை போக வேண்டாம் சொல்லிக்கிட்டு இருக்கான்!
==========
6. நண்பர்1: தனுஷ் "பொல்லாதவன், அஜித் "பில்லா" தெரியும் அது என்ன அவரைப்பார்த்து எல்லாம் பில்லாதவன் சொல்றாங்க!
நண்பர்2: அவர் பலே ஆசாமி , ஹோட்டலுக்கு சாப்பிட கூப்பிட்டு போய்ட்டு பில்லை நம்ம தலைல கட்டிட்டு எஸ்கேப் ஆகிடுவார், பில் தர மாட்டார் அதான் "பில்லாதவன்"
==========
7. மீனா: நம்ம பரிமளாவுக்கு ஓவர் பந்தாடி...
வீணா: எப்படி சொல்ற...
மீனா: அவ ஜாக்கெட்ல இருக்க ஜன்னலுக்கு ஒரு விண்டோவ் ஏசி வைக்க போறாளாம்!
==========
இன்றைய மெகா ஜோக்:
8. அவள்: அந்த டைலர் லேட்டஸ்ட் டெக்னாலஜிப்படி ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பாரம்?
இவள்: எப்படி?
அவள்: ஜாக்கெட்ல இருக்க ஜன்னலுக்கு "பவர் விண்டோவ் "எல்லாம் வைப்பாராம் ஒரு பட்டனை அமுக்கினா விண்டோவ் தானா மூடிக்கிட்டு சாதாரண ஜாக்கெட் ஆகிடுமாம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment