1. சர்தார்ஜி: ஒரு காபி எவ்வளவு?
ஹோட்டல் ஓனர்: 5 ரூபா
சர்தார்ஜி: எதிர்த்த கடையில ஒரு காபி 35 பைசான்னு போட்டிருக்கு...
ஹோட்டல் ஓனர்: யோவ்...! அது ஜெராக்ஸ் காபியா..
==========
2. எதுக்கு டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்கு நாயைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க ?
ரத்தம்னா அதுக்கு ரொம்பப் பிடிக்கும் அதான்...
==========
3. அவருக்கு நாக்கு தொங்குதே... ஏன் ?
அழகிப் போட்டிகளுக்கு தொடர்ந்து நடுவரா இருந்து இப்படி ஆயிட்டாரு
==========
4. கவர்ச்சி நடிகையை திரௌபதியா போடாதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா.. .
ஏன் என்ன ஆச்சு ?
துயிலுரியற சீன்லே சிரிச்சுக்கிட்டு நிக்கறாங்க!
==========
5. பொங்கல் முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சுதான் என் கணவர் பொங்கல்ல உப்பு கொஞ்சம் அதிகம்-னு சொன்னாரு ?
ஏன்...?
பொங்கலை வாய்ல போட்ட உடனே ரெண்டு நாள் அவரால வாயையே திறக்க முடியலையே.. .
==========
6. இளவரசரைப் பல்லக்கில் செல்வதற்குத் தடை போட்டிருக்கிறீர்களாமே, பிரபு ?
பல்லக்குகளில் அமர்ந்தபடியே திருட்டு தம் அடிப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது அமைச்சரே
==========
7. சார்... என் மாமியாரை ஒரு வாரமா காணலை...
ஒரு வாரமா என்ன பண்ணீங்க...?
வேற வழியில்லாம ஒரு வாரமா என் நாத்தனாரோட சண்டை போட்டுட்டு இருந்தேன்.
இது தாங்க இன்னிக்கு மெகா ஜோக்கு:
8. மிஸ்டர் மொக்கை குடும்பம் கோடைக்கால சுற்றுலாவுக்கு கிளம்பியது. ஆனால் ஒரு பிரச்னை.. அவர்களின் பசு மாட்டை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அதற்காக சிலரை அணுகி, மொக்கை வேண்டினார்.
ஒருவர், "10 நாளைக்கு 300 ரூபாய் பணம் கொடு.. அதோட, சாணியையும் வறட்டிக்காக நான் எடுத்துப்பேன்.. சம்மதம்ன்னா விட்டுட்டு போ..!" என்றார்.
மொக்கைக்கு இது அதிகமாகப் பட, இன்னொருவரை அணுகினார்.. "எனக்கு 200 ரூபாய் கொடு.. சாணியும் வேணும்.. நான் பாத்துக்கறேன்..!" என்றார். இதற்கும் மொக்கை சம்மதிக்கவில்லை. வெகுநேரம் வெவ்வேறு ஆட்களை வேண்டிப் பார்த்தார். இறுதியாக, ஓமகுச்சி நரசிம்மன் போல ஒரு ஆள் சிக்கினான்..
"50 ரூவா கொடுங்க சாமி.. நான் கவனிச்சுக்கறேன்..!"
வெரி குட்.. இந்தா 50 ரூவா.. இன்னொன்னு.. சாணியைக் கூட நீயே எடுத்துக்கலாம்..
"அதுக்கு அவசியமே வராது சாமி.. 50 ரூவாதானே கொடுத்திருக்கீங்க...! சாணியெல்லாம் போடாது..!!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment