1. உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன்.
சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க, பொறையா, பிஸ்கட்டா ?
==========
2. பள்ளிக்கூட திறப்பு விழாவுக்கு நம்ம தலைவரைக் கூப்பிட்டது ரொம்பத் தப்பா போச்சு.
எதனால .. ..?
வகுப்பு அறைகளைப் பார்த்துட்டு, இதென்ன ரூம், ரூமா கட்டியிருக்கு, லாட்ஜா? -னு கேட்கிறாரு
==========
3. இயக்குனர்: விஜய் துப்பாக்கி சுடும் வீரராக நடிக்கிறாப்போல ஒரு படம் எடுக்கிறேன்.
தயாரிப்பாளர்: பேர் என்ன?
இயக்குனர்:அழகிய டுமீல் மகன்!
==========
4. நண்பர்: கார்த்திக் அஜித் ஃபேன் என்பதை நிருபிச்சுட்டாண்டா...
நண்பர்2: எப்படிறா?
நண்பர்1: வரலாறு ல மட்டும் பாஸ் மத்த சப்ஜெக்ட்ல எல்லாம் பெயில் ஆகிட்டான்.
==========
5. இயக்குனர்: நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் கதையை வச்சு ஒரு சரித்திர படம் எடுக்கப்போறேன்.
தயாரிப்பாளர்:பெயர் என்ன வச்சு இருக்கிங்க...
இயக்குனர்: நேதாஜி - "the bose"
==========
6. உங்க பையன் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாக பேசுறான்...
அப்படி என்ன பேசினான்:
வெங்காயத்தை உரிச்சா கண்ணில தண்ணீர் வரும் சொன்னிங்க, பெருங்காயத்தை உரிச்சா என்ன வரும்னு கேட்கிறான்?
==========
7. கல்லூரி னு படம் வந்துச்சு அதுக்குள்ள பழனியப்பா கல்லூரினு ஒரு படம் வருதே, ரெண்டும் ஒண்ணா?
படத்துக்கு கல்லூரினு பேரு வச்சாங்க ஆனா கல்லூரிக்கு பேருக்கு வைக்க மறந்துட்டாங்களாம், அதான் பழனியப்பா கல்லூரினு பேரு வச்சு கல்லூரிய திரும்பவும் ரிலீஸ்
செய்றாங்க!
==========
இன்றைய மெகா ஜோக்:
8. நிதி வசூலிப்பவர்:" flood donation" நிதி கேட்டா ஒரு பாட்டில் தண்ணீர் தரிங்களே!
என்னை என்ன கேணைப்பயனு நினைச்சிங்களா.... "blood donation" என்று வந்திங்க ஒரு பாட்டில் ரத்தம் கேட்டிங்க கொடுத்தேன், இப்போ "flood donation" கேட்கறிங்க
அதான் சரியா ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment